வாஷிங்டன்: செப்டம்பர் மாதத்தின் 3வது வாரத்தில் அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி, அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் ஹூஸ்டன் நகரங்களுக்கு செல்கிறார்.
அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் அழைப்பு விடுத்ததன் நேரில் அமெரிக்கா செல்லும் மோடி, ஐ.நா பொதுச் சபை கூட்டத்திலும் கலந்து கொள்கிறார். பிரதமர் கலந்து கொள்ள உள்ள ஐநா பொதுச் சபை கூட்டம் நியூயார்க் நகரில் செப்டம்பர் 20 துவங்கி 23 வரை நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்திற்கு பிறகு ஹூஸ்டன் செல்லும் மோடி, டெக்சாஸ் நகரைச் சேர்ந்த இந்திய – அமெரிக்க சமூகத்தினரை சந்திக்க உள்ளார்.
வாஷிங்டன் நகருக்கு மோடி செல்வது இதுவரை இறுதி செய்யப்படவில்லை. இருப்பினும் ஐநா கூட்டத்தின் ஒரு அங்கமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் உலக தலைவர்களையும் சந்திக்க உள்ளார்.
மோடி 2014ஆம் ஆண்டில் பிரதமரான பின்னர் இரண்டு முறை அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றியுள்ளார். 2014ஆம் ஆண்டில் நியூயார்க்கின் மேடிசன் சதுக்கத்தில், 2016ஆம் ஆண்டில் சிலிக்கான் வேலியில் அவர் உரையாற்றியுள்ளார்.
– வணக்கம் இந்தியா