“குழந்தைப் பிச்சைக்காரர்களே இல்லாத நிலையை உருவாக்குவோம்!” – 2.0 கொண்டாட்டத்துடன் அமெரிக்க ரஜினி ரசிகர்கள் பிரச்சாரம்!
குழந்தைகளை பிச்சைக்காரர்களாக மாற்றி தொழிலாக நடத்து வரும் மாஃபியா கும்பலுக்கு எதிரான பிரச்சாரத்தையும் முன்னெடுத்துள்ளோம். நாம் யாரும் குழந்தைகளிடம் பிச்சை போடக்கூடாது. பிச்சை போடுவதை நிறுத்தினால் எல்லாமும் மாறும். இந்த முழக்கத்தை வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவை மற்றும் க்ரேட் ரஜினி ஃபேன்ஸ், யு.எஸ்.ஏ., பிரச்சாரமாக முன்னெடுத்துச் செல்கிறார்கள்.
டல்லாஸ் : அமெரிக்காவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 2.0 திரைப்படம், உள்ளூர் நேரப்படி நாளை புதன்கிழமை மாலை 6 மணி அளவில் வெளியாகிறது. 1000 ப்ரீமியர் காட்சிகள் திரையிடப் படுகிறது. முன்பதிவுகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
2.0 படத்தை வரவேற்று அமெரிக்கா முழுவதிலும் ரசிகர்கள் கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகிறார்கள். பேனர்கள், கொடிகள் என தமிழகம் போல் அமர்க்களப் படுத்த உள்ளார்கள். 2.0 கொண்டாட்டத்துடன் “No More Child Beggars” என்ற முழக்கத்தையும் முன்னெடுத்து உள்ளார்கள்
டல்லாஸில் அலங்கார விளக்குகளுடன் மிகப்பெரிய சைஸில் பேனர் நிறுவப்பட்டுள்ளது. பேனர் திறப்பு விழா டல்லாஸ் இர்விங் பகுதியில் நடைபெற்றது. அமெரிக்காவில் இத்தகைய பேனர் அமைக்கப்பட்டது 2.0 படத்துக்கு தான் அமைக்கப் பட்டுள்ளது.
தமிழர்கள், இந்தியர்கள் மட்டுமல்லாமல் அமெரிக்கர்களும் பேனருடன் நின்று செல்ஃபி எடுத்துச் செல்வது ஆச்சரியமாக இருக்கிறது. இது குறித்து ரஜினி வாசு கூறியதாவது, “ தலைவர் ரஜினி ரசிகர்கள் எப்போதும் தனி முத்திரை பதிப்பவர்கள் என்பதை நிருபித்து வருகிறோம். அமெரிக்காவும் அதற்கு விதி விலக்கல்ல என்பதை 2.0 கொண்டாட்டங்கள் எடுத்துரைக்கும். புதன் கிழமை ரசிகர் காட்சிக்கு ஒரே விதமான டிஷர்ட் அணிந்து சென்று பார்க்க உள்ளோம். இங்குள்ள அனைத்து தியேட்டர்களிலும் 2.0 பற்றிய பேச்சாகவே உள்ளது.
தலைவர் ரஜினிகாந்தின் 2.0 மிகப் பெரிய வெற்றி அடையும் என்பது உறுதி. அமெரிக்காவிலும் புதிய சாதனை படைக்கும் என்பதும் நிச்சயம். பெற்றோர்கள் மட்டுமல்லாமல் அமெரிக்காவில் பிறந்த அடுத்த தலைமுறை பிள்ளைகளும் 2.0 படத்தை காண மிகுந்த ஆர்வத்துடன் உள்ளார்கள்” என்று கூறினார்.
மேலும் அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவை மற்றும் க்ரேட் ரஜினி ஃபேன்ஸ், யு.எஸ்.ஏ சார்பில் ரசிகர்கள் காட்சி கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளதாகவும் ரஜினி வாசு தெரிவித்தார்.
மேலும், குழந்தைகளை பிச்சைக்காரர்களாக மாற்றி தொழிலாக நடத்து வரும் மாஃபியா கும்பலுக்கு எதிரான பிரச்சாரத்தையும் முன்னெடுத்துள்ளோம். நாம் யாரும் குழந்தைகளிடம் பிச்சை போடக்கூடாது. பிச்சை போடுவதை நிறுத்தினால் எல்லாமும் மாறும். இந்த முழக்கத்தை வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவை மற்றும் க்ரேட் ரஜினி ஃபேன்ஸ், யு.எஸ்.ஏ., பிரச்சாரமாக முன்னெடுத்துச் செல்கிறோம்,” என்றும் வாசு கூறினார்.
கடந்த சில நாட்களாக சாதி இல்லாத, மதம் இல்லாத, சான்றிதழ் பெற்ற வேலூர் மாவட்டத்தினை சேர்ந்த வழக்கறிஞர், தங்கை சினேகாவை பற்றி பெருமையாக , இணையம் மற்றும்...
வாஷிங்டன்: சூற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் இம்மாதம் 15ம் தேதி சென்னை பத்திரிக்கையாளர்கள் மன்றத்தில் பூவுலகின் நண்பர்கள், நேர்மை மக்கள் இயக்கம், இளம்தமிழகம், தமிழ்தேச மக்கள் முன்னணி,...
சென்னை: கடந்த பொங்கலையொட்டி ஜனவரி 10 ம் தேதி விஸ்வாசம் படம் 500-க்கும் மேற்பட்ட அரங்குகளில் வெளியானது. இந்தப் படத்துடன் ரஜினியின் பேட்ட 700க்கும் அதிகமான அரங்குகளில்...
சென்னை: நேற்றைய தினம் உலக அளவில் தமிழர்களின் கவனத்தைப் பெற்றது, தேமுதிக தலைவர் விஜயகாந்தை ரஜினிகாந்தும், மு.க.ஸ்டாலினும் அடுத்தடுத்து சந்தித்த நிகழ்வுகள் தான். உடல்நலக்குறைவால் கடந்த சட்டமன்றத்...
டெல்லி: உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி எரிக்சன் டெலிகாம் நிறுவனத்திற்கு பணம் செலுத்தாதால் அனில் அம்பானி மற்றும் சம்மந்தப்பட்டவர்கள் மீது, நீதிமன்ற அவதூறுக்காக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. நீதிமன்ற...
விசாகப்பட்டினம்: காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைபடை தாக்குதலில் இந்திய துணை ராணுவ படையினர் 40 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் எதிரொலியாக, பாகிஸ்தானுடன் உலக கோப்பை...
விழுப்புரம்: விழுப்புரம்- திண்டிவனம் சாலையில் தடுப்புச்சுவரில் கார் மோதிய விபத்தில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் பலியானார். 62 வயதான ராஜேந்திரன் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் இருந்து...
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 35-ஏ வை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மனு மீதான...
சௌந்தர்யா - விசாகன் திருமண நிகழ்ச்சிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் வந்து வாழ்த்தினார். கமல் ஹாஸன் உள்ளிட்ட திரையுலகினர், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ...
சான் ஃப்ரான்சிஸ்கோ: தமிழ்நாட்டில் பழனி, திருச்செந்தூர் கோவில்களுக்கு நெடுந்தூரத்திலிருந்தும் நடந்து செல்வது போலவே, கலிஃபோர்னியா கான்கார்ட் நகரில் உள்ள முருகன் கோவிலுக்கு 60 மைல்கள் தொலைவு வரை ...
சென்னை: சௌந்தர்யா - விசாகன் திருமணம் வரும் பிப்ரவரி 11-ம் தேதி சென்னை லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டலில் நடக்கவிருக்கிறது. இதில் ரஜினியின் நண்பர்கள், அரசியல் தலைவர்கள் ...
ஓக்லண்ட்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமல ஹாரிஸ், பிறந்த ஊரான ஓக்லண்ட் நகரில் பிரச்சாரத்தைத் தொடங்கினார். கூட்டத்தில் எடுக்கப்பட்ட சில படங்கள்.
இந்த ரஜினியை பார்க்கத்தான் ரசிகர்கள் தவம் கிடந்தார்கள். அவர்களின் நீண்டகால ஆசையை நிறைவேற்றி விட்டார் சக ரஜினி ரசிகரான கார்த்திக் சுப்பராஜ். உல்லாலா பாடலில் இருந்து ரஜினியின் ...