தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்த 48 மணி நேரத்தில் 30 செமீ வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி, தரங்கம்பாடி, பூம்பகார், கொள்ளிடம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
கடலூர் மாவட்டம் திண்டிவனம், மைலம், கூட்ரேப்பட்டு, செண்டூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
திருவாரூர் மாவட்டத்தில், திருத்துறைப்பூண்டி, மாங்குடி ஆலத்தம்பாடி, கமலாபுரம் பகுதியில் கனமழை
தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, சேதுபாவாசமுத்திரம் கனமழை பெய்தது.
காரைக்கால், திருநள்ளாறு, திருப்பட்டினம்சேரி உள்ளிட்ட பகுதிகளின் கனமழை பெய்தது.
இதற்கிடையே கடலூர் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ககன்தீப் சிங் பேடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “நாகை முதல் புதுச்சேரிவரை அடுத்த 2 தினங்களுக்கு 30 செ.மீ. வரை மழையும், 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என தகவல் பெறப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையால் மாவட்டம் முழுவதும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
2 நாட்களுக்கு தேவையான உணவு, குடிநீர், அத்தியாவசிய பொருட்களை பொதுமக்கள் சேகரித்து வைத்துக் கொண்டால் மழையை எதிர்கொள்ளலாம்.
பொதுமக்கள் தங்க வைக்கப்படும் முகாம்களில் உணவுப்பொருள் இருப்பு வைக்கப்ட்டுள்ளது. வீராணம், பெருமாள், வாலாஜாபாத் ஏரிகளில் நீர்மட்டத்தை குறைக்க உத்தரவிடப்பட்டுள்ளது,” என கூறினார்.
– வணக்கம் இந்தியா