சென்னை: சௌந்தர்யா – விசாகன் திருமண நிகழ்ச்சிகள் கடந்த நான்கு நாட்களாக சென்னையில் நடந்து வருகிறது. கடந்த 8-ம் தேதி ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. அடுத்து நேற்று இருவருக்கும் முறைப்படி திருமணம் ரஜினி வீட்டில் நடந்தது.
இன்று 11-ம் தேதி லீலா பேலஸ் ஹோட்டலில் திருமண வரவேற்பு நடந்தது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றுமி் அமைச்சர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி, வைகோ, திருநாவுக்கரசர், நடிகர் கமல் ஹாஸன், தனுஷ், இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார், நக்கீரன் கோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
– வணக்கம் இந்தியா