அமித்ஷா மகன் விவகாரம்; சம்பாதித்த நன்மதிப்பை மொத்தமாக இழந்து நிற்கிறோம்! - யஷ்வந்த் சின்ஹா - VanakamIndia

அமித்ஷா மகன் விவகாரம்; சம்பாதித்த நன்மதிப்பை மொத்தமாக இழந்து நிற்கிறோம்! – யஷ்வந்த் சின்ஹா

டெல்லி: அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா நடத்தி வரும் நிறுவனத்தின் வருமானம் பன்மடங்கு அதிகரித்துவிட்டதாக ‘தி வயர்’ என்ற இணையதளத்தில் அண்மையில் செய்தி வெளியானது.

இதுகுறித்து வெளிப்படையான விசாரணை தேவை என காங்கிரஸ் உட்பட அனைத்து எதிர்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.

ஜெய் ஷாவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரம் இல்லாதவை. ஆகவே, அதுகுறித்து விசாரணை நடத்த தேவையில்லை என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார். மேலும், சம்பந்தபட்ட இணையதளம் மீது ஜெய் ஷா அவதூறு வழக்கும் 100 கோடி ரூபாய் அபராதம் கேட்டும் வழக்கு தொடுத்துள்ளார்.

இந்நிலையில் பீகார் மாநிலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, “ஜெய் ஷாவுக்கு ஆதரவாக மத்திய அமைச்சர்கள் வரிந்து கட்டுவது தேவையற்றது. ‘தி வயர்’ இணையதளத்தின் மீது வழக்கு தொடுத்திருப்பது ஊடகங்களின் குரல்வளையை நெரிக்கும் செயலாகும். அதனைத் தவிர்த்திருக்க வேண்டும். இது போன்ற செயல்களால், இத்தனை ஆண்டுகளாக மக்களிடம் சம்பாதித்த நன்மதிப்பை பாஜக இழந்துவிட்டதாகவே எண்ண தோன்றுகிறது. இந்த குற்றச்சாட்டு உண்மையா? இல்லையா? என்பதை குறித்து விசாரிக்கப்பட வேண்டும்,” என்றார்.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!