So What ? வந்தா வந்துட்டு போறார் - கதிர் - VanakamIndia

So What ? வந்தா வந்துட்டு போறார் – கதிர்

So What?
வந்தா வந்துட்டு போறார்.
போட்டா போட்டுட்டு போறாங்க.
ஆனா ஆயிட்டு போறார்.
உங்களுக்கு ஏம்பா இவ்ளோ டென்சன்.

இதுவரைக்கும் இழக்காத
எத புதுசா இழக்க போறீங்க.

அஞ்சு நிமிச பேச்சால
இந்தளவு டிஸ்டர்ப் பண்ண முடியுதுன்னா
அவர்ட்ட ஏதோ பவர் இருக்குனு அர்த்தம்

மாற்றம் வேணும் மாற்றம் வேணும்னு
மந்திரம் மாதிரி ஜெபிக்றவங்களும்
அய்யய்யோ வரக்கூடாதுனு அலறினா
அது எப்டிங்க நியாயம்

கொள்கை, தொண்டர், கட்டமைப்புல்லாம்
கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இருக்கு
ஆனா ஓட்டு யாரும் போட்றதில்ல

நோயாளி வலி அடுத்தவனுக்கு புரியாது
அலோபதி ஆயுர்வேதா சித்தா யுனானி
எதுலயும் வலி தீரலைன்னா
புது டாக்டர்ட்ட போகத்தான் தோணும்

யார் வேணா ஆட்சிய பிடிக்கலாம்
ஜனநாயத்தின் பியூட்டியே அதுதான்
அமெரிக்கால ட்ரம்ப் வந்தது மட்டுமில்ல
இங்கே மோடி வந்ததுகூட அப்டிதான்

ரெண்டு பேரும் கட்சி பலத்துல
ஆட்சிக்கு வந்தாங்கன்னு நம்பினா
அது உங்க அரசியல் அறியாமை
கட்சியை மீறி சாதிச்சவங்க அவங்க

ஆன்மிக அரசியல்னு சொல்றதுல
ஒரு குழப்பமும் கிடையாது
வாழு வாழ விடு என்பதுதான் அது
மதங்களை தாண்டிய சித்தாந்தம்

புடவை, ஹேர்ஸ்டைல்லாம் மாத்திட்டு
நாற்காலிய நெருங்கி போன
உட்டாலக்கடி அரசியல்லாம் பாத்தவங்க
20 வருசம் யோசிச்சு முடிவு எடுத்து
இறங்குறவர பாத்து அலற தேவையில்ல

அட்லீஸ்ட் அவர்ட்ட ரகசிய திட்டம் இல்ல
முடிஞ்சா செய்வார் இல்லேனா போவார்
வெயிட் பண்ணிதான் பாப்போமே

பழசெல்லாம் ஓரங்கட்டிட்டு
I Welcome Rajinikanth 2.0

– கதிர் , மூத்த பத்திரிக்கையாளர்

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!