Why no audio launch for Naachiyaar?

நாச்சியார் பாடல்கள் வெளியாவதில் சிக்கல்!?

ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடிக்க பாலா இயக்கியுள்ள படம் நாச்சியார். இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். சில வாரங்களுக்கு முன்பு வெளியான டீசர் சர்ச்சைகளுக்கு உள்ளானதைத் தொடர்ந்து இந்தப் படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.

இசையமைப்பாளராக இருந்து நடிகரானவர் ஜி.வி.பிரகாஷ்.அவர் படத்திற்கு இசைஞானி இசையமைத்ததால் பாடல்கள் குறித்த எதிர்பார்ப்பும் அதிகம். இரண்டு நாளில் படம் ரிலீஸாகவிருக்கிற நிலையில்,இன்றுவரை பாடல்கள் வெளிவரவில்லை!

இதுவரை இல்லாத அளவுக்கு படத்தின் நீளம் குறைவாக எடுத்திருக்கிறார் இயக்குனர் பாலா. தவிர, கதையின் தேவைக்கேற்ப இரண்டு பாடல்கள் மட்டுமே இடம் பெற்றிருக்கிறதாம்.அதனால் படம் வரும்போது, படத்தோடு கேட்டால் சிறப்பாக இருக்கும் என்பதால், பாடல்களை வெளியிட வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம் இசைஞானி.

ராஜா கைய வச்சா ராங்கா போகுமா!

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!