ரஜினி பிறந்த நாள்: மறந்தாரா அல்லது மாறியதா மோடியின் நெஞ்சம்? - VanakamIndia

ரஜினி பிறந்த நாள்: மறந்தாரா அல்லது மாறியதா மோடியின் நெஞ்சம்?

சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாளை உலகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்கள் கடந்த ஒரு வாரமாக கொண்டாடி வருகிறார்கள். நேற்று பிறந்தநாள் அன்று, அரசியல் உட்பட அனைத்து துறையிலும் உள்ள பிரபலங்களும் வாழ்த்து மழையில் ரஜினியை நனைத்து விட்டனர்.

ட்விட்டரில் வாழ்த்து சொன்ன தலைவர்களுக்கும், நண்பர்களுக்கும் பதில் ட்வீட் செய்து நன்றி தெரிவித்துள்ளார் ரஜினி. மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, ஓபிஎஸ், முக ஸ்டாலின், அமிதாப் பச்சன் என வரிசைப் படி நன்றி கூறி ட்வீட் செய்துள்ளார்.

இந்த வாழ்த்து மழையில் குறிப்பிடத் தக்க மிஸ்ஸிங், பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இருவரும் ரஜினியின் பிறந்த நாளுக்கு சமூக வலைத் தளம் மூலம் வாழ்த்து தெரிவிக்கவில்லை. தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்ததாக அறிக்கைகள் ஏதும் வந்ததாகவும் தெரியவில்லை.

தினத்தந்தி 75ம் ஆண்டு விழாவுக்கு வந்த பிரதமர், முதல் வரிசையில் அமர்ந்திருந்த ரஜினியுடன் கைகுலுக்குவதற்காக கீழே வந்து, அமைச்சர்கள் அனைவருக்கும் கை குலுக்கி விட்டு ரஜினியிடம் பேசினார். அதை தனது ஃபேஸ்புக் பக்கத்திலும் வெளியிட்டார்.

நேற்று ட்விட்டரில் மோடியின் குஜராத் தேர்தல் பிரச்சாரம் தான் இடம்பெற்று இருந்தது. ரஜினிக்கு வாழ்த்து ஏதும் இல்லை. அவருடைய ஃபேஸ்புக் பக்கத்திலும் வாழ்த்துச் செய்தி இல்லை.

குஜராத் தேர்தல் பிரச்சாரத்தினால் ரஜினியின் பிறந்தநாளை மறந்து விட்டாரா? அல்லது மாறிவிட்டதா நெஞ்சம்!..ரஜினியின் ட்விட்டரிலும் மோடிக்கு நன்றி தெரிவித்து ஏதும் இல்லை.

ஒரு வகையில் ரஜினிக்கு இது நல்லதாகவே அமைந்து விட்டது. மோடியின் வாழ்த்தைக் கூட திரித்து ‘ ரஜினி பாஜகவின் பினாமி’ என்று சொல்லுவதற்கும் ஒரு கூட்டம் இருக்கிறதல்லவா!

– வணக்கம் இந்தியா செய்திகள்

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!