Why Kamal makes unwanted remarks about Rajini

ரஜினி கட்சிக்கு கொள்கை பரப்புச் செயலாளரா கமல் ஹாசன்?

கமல் அவர் கருத்தை தெரிவிக்கும் போது தேவையில்லாம ரஜினியை கூட இழுத்துட்டே இருக்காரு. ஒரு முறை என்றால் பரவாயில்லை ஒவ்வொருமுறையும் என்றால் எப்படி?!

ஏற்கனவே ஆங்கில ஊடகத்தில் ரஜினியையும் காவியையும் ஒப்பிட்டு பேசினார், அதன் பிறகு பல பேட்டிகளில் ரஜினி அரசியல் பற்றிப் பேசாமல் இருந்ததே இல்லை. கேள்விகள் இது குறித்து இல்லையென்றாலும் இவராகவே பேசுகிறார். இவரே தான் “கருப்புக்குள் காவியும் அடங்கும்” என்றார், பின் “பாஜக உடன் கூட்டணி வைக்க வேண்டிய தேவை வந்தால் தயங்க மாட்டேன்” என்றும் கூறினார்.

ஆனால், சம்பந்தமே இல்லாமல் ரஜினி கையையும் பிடித்து இழுத்து விட்டுட்டு இருக்காரு.இதனாலோ என்னவோ நடிகர் திலகம் நிகழ்ச்சியில், ரஜினி மறைமுகமாக விமர்சித்து இருந்தார்.

கடந்த வாரம் விகடன் தொடரில் “ரஜினியுடன் இணைவீர்களா? என்று என்னைக் கேட்கிறார்கள்” என்று இவரே எழுதிக் கொள்கிறார். நிகழ்ச்சியில், பேட்டியில் யாராவது நிருபர் இணைப்பு பற்றிக் கேட்டு அதற்குப் பதில் கூறினால் ஒரு நியாயம் இருக்கிறது. தொடரில் இவரே கூற வேண்டிய தேவையென்ன? அது தான் ரஜினியே “காலம் பதில் கூறும்” என்று கூறியதை இவரும் ஏற்றுக்கொண்டாரே!

கமல் அடிக்கடி கூறுவதால், ஊடகங்களும் ரஜினியிடம் இக்கேள்வியை கேட்டு இம்சையை கூட்டுகிறார்கள். ரஜினி என்ன கூறினாலும் அதை வைத்து ஒரு வாரம் விவாதிக்கிறார்கள். அமெரிக்கா போனவர் அங்கேயும் காவி, கருப்பு, அரசு அதிகார எதிர்ப்பு என்று எதையோ பேசிட்டு போகட்டும் சம்பந்தமே இல்லாமல் திரும்ப எதற்கு ரஜினியை இழுக்க வேண்டும்?.

ரஜினி ஏற்கனவே, தன்னுடையது “சாதி மதமற்ற ஆன்மீக அரசியல்” என்று தெளிவுபடுத்தி விட்டார். அதன் பிறகும் இவர் “நான் கருப்பு ஆனால், ரஜினி காவியாக இருக்கலாம்” ன்னு சொல்றாரு.

இதை விடக் கடுப்பு ‘நான் ரஜினியுடன் கூட்டணி வைக்க மாட்டேன்’ என்று இப்போ கூறுகிறார்! என்னமோ ரஜினி வந்து கமல் கிட்ட “கூட்டணி வைங்க கூட்டணி வைங்க” என்று கெஞ்சிட்டு இருக்கற மாதிரி “அதெல்லாம் வாய்ப்பில்லை” ன்னு சொல்லிட்டு இருக்காரு.

ரஜினி மீது விமர்சனம் இருந்தால், தாராளமாக விமர்சிக்கட்டும் அதை விட்டு எதற்கு இன்னொருவருடைய கொள்கைகள் பற்றி ஊகங்களைத் தெரிவிக்க வேண்டும்.கமல் அவருடைய கட்சியை வளர்க்க மட்டும் பேசட்டும் அடுத்தவர் கட்சிக்கு “கொள்கை பரப்பு செயலாளர், செய்தி தொடர்பாளர்” வேலை பார்க்க வேண்டாம்.

– கிரி

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!