விஷால் ப்ளான்: முதல்ல ராமாவரம் தோட்டம்... அடுத்து மெரீனா சமாதி... அப்படியே ஸ்ட்ரெயிட்டா கோட்டைதான்! - VanakamIndia

விஷால் ப்ளான்: முதல்ல ராமாவரம் தோட்டம்… அடுத்து மெரீனா சமாதி… அப்படியே ஸ்ட்ரெயிட்டா கோட்டைதான்!


சென்னை: ஆர்.கே நகர் இடைத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் விஷால், இன்று திங்கட்கிழமை மனுத் தாக்கல் செய்ய உள்ளார்.

”காலை 9 மணிக்கு ராமாவரத்தில் உள்ள புரட்சித் தலைவர் இல்லத்தில் மரியாதை செய்தல். காலை 10 மணிக்கு மெரினாவில் புரட்சித்தலைவி நினைவிடத்தில் மரியாதை செய்தல். மதியம் 12:30 மணிக்கு ஆர்.கே நகர் தேர்தல் அலுவலகத்தில் மனு தாக்கல் மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு,” என்று அட்டவணை போட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார் விஷால்.

அப்போ விஷால் அதிமுகவின் இன்னொரு கோஷ்டியா? ஜெ அண்ணன் மகள் தீபா மாதிரி, அடிப்படை உறுப்பினரே இல்லாமல் அதிமுகவுக்கு சொந்தம் கொண்டாட வந்துருக்கிறாரா விஷால்?

”ரெண்டாம் க்ளாஸ் படிக்கும் போது போய்ஸ் தோட்டத்திலே அம்மா வீட்டுலேதான் விளையாடுவேன், அம்மா மடியிலே கொஞ்சியிருக்கிறேன்” ஏதாவது புதுசுபுதுசா சின்ன வயசுக் கதை சொல்லாமல் இருக்கும் வரை சரி.

புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி என்று இன்று புகழும் விஷால், இடையில் புரட்சித்தளபதி என்று பட்டம் சூட்டிக்கொண்டார். அதிமுகவினரிடம் குட்டு வாங்கிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!