Virginia State Festival Pongal celebration in Washington

அமெரிக்க தலைநகரில் அரசு அங்கீகாரத்துடன் முதல் பொங்கல் விழா!

வாஷிங்டன்: அமெரிக்கத் தலைநகரான வாஷிங்டன் வட்டாரம் என்பது வர்ஜீனியா, மேரிலாண்ட் என்ற இரண்டு மாநிலங்களுக்கு உட்பட்டதாகும். தலைநகரம் வாஷிங்டன் டிசியை சுற்றியுள்ள இந்த இரண்டு மாநிலப் பகுதிகளில் தான் ஏராளமான தமிழர்கள் வசித்து வருகிறார்கள்.

இங்கு வாஷிங்டன் வட்டார தமிழ்ச் சங்கம் 41ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இங்கு பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப் பட்டு வருகிறது. இந்த ஆண்டு பொங்கல் ஜனவரி 20ம் தேதி நடைபெறும் விழா, அரசு அங்கீகாரம் பெற்ற பொங்கல் விழாவாக சிறப்பு பெறுகிறது.

இந்தப் பகுதியில் இயங்கி வரும் ஆறு தமிழ்ப்பள்ளிகளும் ஏனைய தொண்டு அமைப்புகளும் தமிழ்சங்கத்துடன் இணைந்து இந்த விழாவை கொண்டாட உள்ளார்கள்.

இயக்குநர் பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா பாக்கியராஜ்
சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள். பட்டிமன்ற பேச்சாளர் முனைவர் பர்வீன் சுல்தானாவும் பங்கேற்கிறார். வசந்த் வசீகரனின் இன்னிசை நிகழ்ச்சியில், ஏனைய பாடகர்களுடன் சூப்பர் சிங்கர் ஜெசிக்காவும் பாட உள்ளார்.

வர்ஜீனியா, மேரிலாண்ட் மாநில கல்வி அதிகாரிகள், செனட்டர்கள் உள்ளிட்ட பல சிறப்பு விருந்தினர்களும் வர உள்ளார்கள். வாஷிங்டன் தமிழ்ச் சங்கத்தின் தென்றல்-முல்லை இதழ் பொங்கல் சிறப்பு சிறப்பு இதழாக வெளிவர உள்ளது.

முன்னதாக வர்ஜீனியா மாநில அரசு சார்பில் ஜனவரி 14ம் தேதி பொங்கல் அரசு விழாவாக ஆணை பிறப்பிக்கப் பட்டது குறிப்பிடத் தக்கது. செனட்டர் டேவிட் புலோவோ கொண்டு வந்த தீர்மானம், 2017ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி வர்ஜீனியா மாநில அவையில் நிறைவேற்றப் பட்டது. இதன் படி 2018ம் ஆண்டு முதல் ஜனவரி 14ம் தேதி வர்ஜீனியா அரசு பொங்கல் விழாவாக அனுசரிக்கிறது. அரசு விடுமுறை கிடையாது .ஆனால் பொங்கல் கொண்டாடும் பள்ளி மாணவர்களுக்கு சிறுப்பு விடுமுறை அளிக்கப்படும்.

சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகமும் வர்ஜீனியா அரசு பொங்கல் விழா பற்றி செய்திக்குறிப்பு வெளியிட்டிருந்தது.

– வணக்கம் இந்தியா

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!