பெண்களை இழிவுபடுத்தாதீர்கள்! - ரசிகர்களுக்கு விஜய்யின் வேண்டுகோள் - VanakamIndia

பெண்களை இழிவுபடுத்தாதீர்கள்! – ரசிகர்களுக்கு விஜய்யின் வேண்டுகோள்

பெண்களை மதிப்பவன் நான். அவர்களை இழிவுபடுத்தி சமூக வலைத் தளங்களில் எழுத வேண்டாம் என ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடிகர் விஜய்யின் படங்களை விமர்சித்து ஒரு பெண் பத்திரிகையார் ட்விட்டரில் பதிவிட்டார். அதற்கு கடுமையாக எதிர்வினையாற்றினர் விஜய் ரசிகர்கள்.

இந்த நிலையில் இன்று நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை :

சமுதாயத்தில் பெண்களை அதிகம் மதிப்பவன் நான்..

யாருடைய திரைப்படத்தையும், யாரும் விமர்சிப்பதற்கு கருத்து சுதந்திரம் உண்டு.

எக்காரணம் கொண்டும், எந்த நேரத்திலும், பெண்களை இழிவாகவோ, தரக்குறைவாகவோ, விமர்சிக்க கூடாது என்பது எனது கருத்தாகும்..

அனைவரும் பெண்மையை போற்ற வேண்டும்..

யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில், சமூக இணையதளங்களில் பெண்கள் மீது தவறான கருத்துக்களை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

-இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!