வெள்ளை மாளிகையைக் கைப்பற்றுவேன்.. வெனிசூலா அதிபர் மகன் சவால்! - VanakamIndia

வெள்ளை மாளிகையைக் கைப்பற்றுவேன்.. வெனிசூலா அதிபர் மகன் சவால்!

கராகஸ்(வெனிசூலா): வெனிசூலா அதிபரின் மகன் நிகோலஸ் மதுரோ கெர்ரா, துப்பாக்கியுடன் வந்து வெள்ளை மாளிகையை கைப்பற்றுவேன் என்று சவால் விடுத்துள்ளார்.

பெட்ரோல் விலை வீழ்ச்சியைத் தொடர்ந்து வெனிசூலா கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. அதைத் தொடர்ந்து அரசியல் ரீதியாகவும் குழப்பங்கள் ஏற்பட்டன. எதிர்க்கட்சியினர் அதிபர் மதுரோ மீது குற்றச்சாட்டுகளை சுமத்தினர்.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் பெரும்பான்மை பெற்ற நிலையில், சட்ட திருத்தம் செய்து, கூடுதல் உறுப்பினர்களை நியமனம் செய்து பெரும்பான்மை காட்டியுள்ளார் மதுரோ.
மக்கள் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். கையில் இருப்பதை எடுத்துக் கொண்டு நாட்டை விட்டு வெளியேறி வருகிறார்கள்.

இந் நிலையில் கடந்த வாரம், வெளியுறவுத்துறை செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் மற்றும் ஐ நாவின் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே இருவரிடமும் அதிபர் ட்ரம்ப் வெனிசூலா நிலைமை பற்றி கேட்டறிந்தார். பின்னர், வெனிசூலாவை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது. பல வழிகள் உள்ளன. ராணுவ நடவடிக்கையும் பரிசீலிக்கிறோம் என்று கூறியிருந்தார்.

இதைக் கண்டித்து வெனிசூலா ராணுவ அமைச்சர் அறிக்கை வெளியிட்டு இருந்தார். ட்ரம்பின் ராணுவ நடவடிக்கை பேச்சு மடத்தனமானது என்றும் கூறியிருந்தார்.

வெனிசூலா அதிபரின் மகனும் , மிஸ்டர் ட்ரம்ப் நாங்கள் துப்பாக்கிகளுடன் வெள்ளை மாளிக்கை வருகிறோம் என்று அரசு தொலைக்காட்சியில் கூறியுள்ளார்.

பென்டகன் ராணுவ வட்டாரத்தில், வெனிசூலா மீது படையெடுக்கும் திட்டம் எதுவும் இல்லை. ஆனால் எந்த நெருக்கடியையும் சமாளிக்கும் நிலையில் தயாராக உள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட கொரியா ஒருபக்கம் குடைச்சல் என்றால், இன்னொரு பக்கம் வலியப் போய் வெனிசூலாவுடன் மல்லுக் கொண்டிருக்கிறார் ட்ரம்ப்.

சரிந்து விட்ட செல்வாக்கை நிலை நாட்ட போர் முழக்கங்கள் செய்து சரிக்கட்டும் ட்ரம்பின் ராஜ தந்திரமோ!

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!