வணக்கம் இந்தியா.... - VanakamIndia

வணக்கம் இந்தியா….

vanakam india

இணைய உலகம் இன்று உச்சத்தில் இருக்கிறது. அச்சு ஊடகத்தில் செய்தித் தாள்கள், குறிப்பிட்ட சில வார இதழ்கள் மட்டுமே தொடர்ந்து கோலோச்சி வருகின்றன. சிறு பத்திரிகைகள், சினிமா பத்திரிகைகள் இருந்த இடத்தை இணையம் பிடித்துவிட்டது.

இணைய வழியில் செய்திகள் வெளியாவது பெருகினாலும், தமிழில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய செய்தித் தளங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். தொழில்முறையில், நேர்த்தியாக செய்திகளை வெளியிடும் தளங்கள் ஒன்றோ இரண்டோதான். மற்றவை செய்தித் தாள்களைச் சார்ந்த தளங்களாகவே உள்ளன.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு, முழுமையான செய்தித் தளமாக இன்றிலிருந்து ‘வணக்கம் இந்தியா’ வெளியாகிறது.

இன்றைய வாசித் தன்மை, செய்தி பரவும் வேகம், சமூக வலைத் தளங்களின் தாக்கம் அனைத்தையும் மனதில் கொண்டு வணக்கம் இந்தியாவின் செய்திகள் அமையும். வெற்றுப் பரபரப்பு, திசை திருப்பும் தலைப்புகளுக்கு நிச்சயம் இங்கே இடமில்லை.

முக்கியமாக வாசகர்களின் பங்களிப்புக்கு அதிக வெளியை வணக்கம் இந்தியா ஏற்படுத்தித் தரும். தமிழ் உலகின் ஆளுமைகள், எழுத்தாளர்கள், திரைக் கலைஞர்கள் பங்களிப்பு அதிகம் இடம்பெறும் தளமாக வணக்கம் இந்தியா திகழும் என்பதையும் இங்கே உறுதியாகக் கூறுகிறேன்.

-முதன்மை ஆசிரியர்
வணக்கம் இந்தியா

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!