வைரமுத்து நல்ல கவிஞர்தான்... ஆனால் வாழ்த்துவதற்கு நல்ல மனம் வேண்டுமே! - VanakamIndia

வைரமுத்து நல்ல கவிஞர்தான்… ஆனால் வாழ்த்துவதற்கு நல்ல மனம் வேண்டுமே!


சென்னை : சக நண்பர், இதைப் பாருப்பா என்று சொல்லி ஒரு முகநூல் இணைப்பை அனுப்பியிருந்தார். அது ஒரு காலண்டர் வெளியீட்டுப் படம். டிசம்பர் ஆரம்பித்து விட்டதல்லவா!. 2018 காலண்டர்களை பல்வேறு தரப்பினரும் வெளியிட்டு இலவசமாக கொடுக்க ஆரம்பித்து விட்டார்களே!.

இந்தக் காலண்டர் ரஜினி ரசிகர்கள் வெளியிட்டுள்ளதாகும். சுத்தி ஏராளமான ரசிகர்கள் இருக்கு நடுநாயகமாக தலையில் மைசூர் தலைப்பாகையுடன் இருக்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து. அவர் கையால் காலண்டர் வெளியிடப்பட்டுள்ளது. புன்னகை மன்னனாக வைரமுத்து வீற்றிருக்க, உடன் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்துடன் ரசிகர்கள்!

இதை அனுப்பிய நண்பர் தொலைபேசியில் அழைத்து பார்த்தியா என்று வேறு விசாரித்தார். அவர் ரஜினி ரசிகர் இல்லை.. ஆனாலும் அவருக்கே பொறுக்கவில்லை என்று சொல்கிறார்.

அட, மேட்டர் ரொம்ப சிம்பிள் தானே!. கபாலி படம் வந்து உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறது. ஆனால், ஒரே ஒருத்தர் மட்டும் ஈனஸ்வரத்தில் ‘ ரஜினியின் தோல்விப் படமான கபாலி’ என்று ஒன்னுக்கு ரெண்டு வாட்டி அழுத்தம் திருத்தமா பேசினாரே.. அது இதே கவிப்பேரரசு வைரமுத்து தானே.

சார், ரஜினிக்கு சூப்பர் டைட்டில் பாட்டு எழுதினது எல்லாம் வைரமுத்து தானேன்னு கேக்குறீங்க தானே!. ஆமா, இளையராஜாவிடம் முறைச்சிகிட்டு வந்த பிறகு, பாட்டெழுத யாருமே அழைக்காத போது அண்ணாமலையில் அனைத்துப் பாடல்களுக்கும் வாய்ப்பு கொடுத்தது யாரு? பாலச்சந்தர் சாரா? சாட்சாத் ரஜினி தானே!. அதுக்குப் பிறகு தானே ஏஆர்ரஹ்மானின் ரோஜாவில் இடம் கிடைத்தது. அதுவும் கவிதாலயா புரொடக்‌ஷன்ஸ். முந்தய தயாரிப்பான அண்ணாமலையில் வைரமுத்து பாட்டு ஹிட்டாச்சு என்ற சென்டிமெண்டில் கிடைத்த வாய்ப்பு தானே. ஆக, வைரமுத்துக்கு மறுவாழ்வு கொடுத்தவர் தான் ரஜினி! அடுத்து வந்த படங்களில் இளையராஜா இசையில் ’வீரா’ தவிர, எல்லாப் படத்துக்கும் கூப்பிட்டு வாய்ப்பு கொடுத்தவர் ரஜினி தானே!

இப்பேர்பட்டவருக்கு கைமாறாக, அந்த பெருங்கவிஞர் என்ன செஞ்சார்? கபாலி படத்திலே ரஞ்சித்திடம் வாய்ப்பு கேட்டார். கபாலியைப் பொறுத்தவரை நடிப்பது தவிர எந்த வேலையிலும் தலையிடக் கூடாது என்று முடிவெடுத்து விட்டார் ரஜினி. ரஞ்சித் மென்னு முழுங்கி ரஜினியிடம் வைரமுத்துவின் நெருக்கடியை சொல்லவும், கொடுத்த வாக்குப்படி உங்க வேலையில் தலையிட மாட்டேன்னு சொல்லிட்டார் ரஜினி. ரஞ்சித் டீம் கவிஞர்கள் பாட்டெழுதினார்கள். படம் வெளியானது. வஞ்சத்தை வார்த்தையில் கொட்டினார் கவிப்பேரரசர். ரஜினியையே உலுக்கி விட்ட சம்பவம் அது.

இதெல்லாம் அந்த காலண்டர் வெளியிட்ட ரஜினி ரசிகர்களுக்கு தெரியாதா என்ன? நமக்கொன்னும் வைரமுத்துடன் எந்த பகையோ நட்போ கிடையாது.

நல்லதா ஒன்னைத் தொடங்கனும்னா நல்ல மனசோட வாழ்த்துறவங்க யாருன்னு பார்த்து கூப்புடுங்க. அவ்வளவு தான்!

– ‘ரைட்’ பாண்டியன்.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!