விஜய்யுடன் இணைகிறார் வடிவேலு! - VanakamIndia

விஜய்யுடன் இணைகிறார் வடிவேலு!

விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் ‘விஜய் 61’ படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தி விஜய்யுடன் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் வடிவேலு.

சில வருடங்களுக்கு முன் நடிச்சா ஹீரோ தான் என அடம் பிடித்துக் கொண்டிருந்த வடிவேலுவிற்கு மார்க்கெட் சரசரவென இறங்கியதால், அவரும் தனது பிடிவாதத்தில் இருந்து இறங்கி கத்தி சண்டை படத்தில் காமெடியனாக களம் இறங்கினார்.

அதன் பிறகு பி வாசுவின் சிவலிங்கா என சில படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார். தற்போது விஜய் நடிக்க அட்லி இயக்கும் படத்திலும் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க வடிவேலு ஒப்புக் கொண்டுள்ளாராம்.

இதனால் தாம் இழந்த தனது மார்க்கெட்டை கைப்பற்றிவிடலாம் என்ற முனைப்பில் இருந்து வருகிறார் வடிவேலு.

Author: admin
Tags

Similar posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!