US military airstrikes kill terrorists in Somalia

அமெரிக்கப் படை விமானத் தாக்குதல்.. சோமாலியாவில் 13 தீவிரவாதிகள் பலி


மொகதிஷு(சோமாலியா): அமெரிக்கப் படையின் விமானத் தாகுதலில் 13 தீவிரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர். இது குறித்து அமெரிக்கப் படையின் ஆப்ரிக்கப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளார்கள். கொல்லப்பட்ட தீவிரவாதிகள் அல் ஷபாப் அமைப்பைச் சார்ந்தவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கப் படைகள் தொடர்ந்து இத்தகைய தாக்குதல்கள் நடத்தும். அமெரிக்காவுக்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் தீவிரவாத அமைப்புகளை வேட்டையாடுவோம். அவர்களுக்கும் எங்கும் புகலிடம் கிடைக்க அனுமதிக்க மாட்டோம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ட்ரம்ப் அதிபராக பதவியேற்ற பிறகு, ஐஎஸ்ஐஎஸ் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகிறார். கடந்த மாதம், அமெரிக்கப் படையின் ஆப்ரிக்கப் பிரிவு தலைமை அதிகாரி, 100 தீவிரவாதிகள் இதுவரையிலும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக கூறி இருந்தார். ஐஎஸ் ஐஎஸ் மற்றும் அல் ஷபாப் அமைப்பை சார்ந்தவர்கள் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

சோமாலியா நாடு தீவிரவாதிகளை தடுக்கும் நடவடிக்கைகளில் சுணக்கம் காட்டுவதாக கூறி, அந் நாட்டுக்கு வழங்கி வந்த நிதியை, முன்னதாக அமெரிக்கா குறைத்தது. சோமாலியா நாட்டு குடிமக்கள் அமெரிக்கா வருவதற்கும் ட்ரம்ப் தடை விதித்தார்.

இந்நிலையில் சோமாலியாவில் அமெரிக்கப் படைகள் தொடர்ந்து தீவிரவாதிகளை வேட்டையாடி வருவது குறிப்பிடத் தக்கது.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!