TTV Dhinakaran condemns Kamal Haasan

கமல் ஹாஸனின் தரம் தாழ்ந்த விமர்சனம்! – டிடிவி தினகரன் கடுப்பு

சென்னை: ஆர்.கே. நகரில் விலை கொடுத்து வாங்கப்பட்ட வெற்றி என்று கமல் ஹாசன் கூறியிருப்பதற்கு அந்த தொகுதி எம்எல்ஏ தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே. நகர் தொகுதியில் வெற்றி பெற்ற டிடிவி தினகரன் நேற்று முதல் வாக்களித்த அந்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று அவர் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில், ”ஜெயலலிதாவின் உண்மையான இயக்கத்தில் இருக்கும் எங்களை நீக்குவதற்கு அவர்கள் யார்?

ஆர்.கே. நகர் மக்களை தரம் தாழ்ந்து நடிகர் கமல் ஹாசன் விமர்சனம் செய்திருக்கிறார். பணம் வாங்கிக் கொண்டு வாக்கு அளித்ததாக அந்த தொகுதி மக்களை கேவலப்படுத்துகின்றனர். இதற்கு அந்த தொகுதி மக்களே பதில் அளிப்பார்கள்,” என்று தெரிவித்துள்ளார்.

திருடனிடமே பிச்சை எடுக்கும் கேவலத்தை ஆர்கே நகர் தொகுதி மக்கள் செய்ததாக கமல் ஹாஸன் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!