100 வது நாள் கொண்டாடிய ட்ரம்ப்.. மீண்டும் ஒரு தோல்வி ஒபாமாகேர் வடிவில் காத்திருக்கு! - VanakamIndia

100 வது நாள் கொண்டாடிய ட்ரம்ப்.. மீண்டும் ஒரு தோல்வி ஒபாமாகேர் வடிவில் காத்திருக்கு!


வாஷிங்டன்(யு.எஸ்): அமெரிக்காவின் 45வது அதிபராக பதவியேற்ற 100 வது நாளை, தொண்டர்களுடன் உற்சாகமாக கொண்டாடினார் அதிபர் ட்ரம்ப்.
ஊடகங்கள் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றன.

‘இழந்த பெருமையை அமெரிக்கா மீண்டும் பெற்றுக் கொண்டிருக்கிறது. உற்பத்தித் துறையில் முன்னேற்றம் கண்டு வருகிறோம். வேலை வாய்ப்புகள் திரும்பி வருகின்றன’ என்று மிகவும் உற்சாகமாக உரையாற்றினார்.

நாஃப்தா ஒப்பந்தத்தை வாபஸ் பெறுவேன் என்று சொல்லி வாக்கு கேட்டார். இப்போது, இறங்கி வந்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி, கனடா, அமெரிக்கா, மெக்சிகோ என மூன்று நாடுகளும் பயனடையும் வகையில் மாற்றம் செய்வோம் என்கிறார்.

ஒபாமாகேர் தோல்வி அடைந்து விட்டது. அது தானாகவே இறுதி முடிவை எட்டிவிட்டது. யாராலும் அதைக் காப்பாற்ற முடியாது என்றெல்லாம் வீராவேசமாக பேசினார்.

ஏற்கனவே ஒபாமாகேர் திட்டத்தை முடக்குவதற்கு இரண்டு தடவை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அது தோல்வியிலேயே முடிந்தது.

ஒபாமாகேர் திட்டத்தை வாபஸ் பெறுவதை கவுரவப் பிரச்சனையாகவே ட்ரம்ப் எடுத்துக் கொண்டுள்ளார். ஒபாமாகேர் திட்டத்தில் ஏற்கனவே நோய்வாய்ப்பட்டிருப்பவர்களுக்கும் இன்சூரன்ஸ் உண்டு என்பது முக்கிய அம்சமாகும்.

தற்போது, புதிய திட்டத்திலும் அந்த அம்சத்தைச் சேர்த்துக் கொள்கிறோம். அதற்கு நான் உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.

ஆனால் குடியரசுக் கட்சியினர் ட்ரம்பின் புதிய திட்டத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை. குடியரசுக் கட்சியின் அவை உறுப்பினர்களில் 21 பேர் இந்த புதிய திட்டத்தை எதிர்க்கிறார்கள்

17 பேர் இன்னும் எந்தப் பக்கம் சாய்வது என்று முடிவெடுக்க வில்லை. சொந்தத் தொகுதியில் வாக்காளர்கள் ஒபாமாகேர் திட்டத்தினால் பலனடைந்து வருவதைக் கண்கூடாக பார்க்கும் இவர்கள் அதை எதிர்த்து வாக்களிக்கத் தயங்குகிறார்கள்.

மீண்டும் மக்களிடம் சென்று வாக்க கேட்க முடியாதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆகையினால் சொந்தக் கட்சியின் திட்டமே என்றாலும் புதிய திட்டத்தை எதிர்க்க முடிவு செய்துள்ளார்கள்

ஒரு வார லீவுக்காக அவை வெள்ளிக்கிழமை தற்காலிகமாக கலைகிறது. அதற்குள் வாக்கெடுப்புக்கு விட்டு புதிய திட்டத்திற்கு ஒப்புதல் வாங்கி விடத் துடிக்கிறார் ட்ரம்ப்.

வாக்கெடுப்புக்கு விட்டால் ஒரிரு வாக்குகளிலே தோல்வி அடையுக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

வரும் வெள்ளிக்கிழமைக்குள் ட்ரம்புக்கு நல்ல சேதி உண்டா அல்லது சைலண்டாக ஒபாமா இன்னொரு இன்னிங்ஸ் தொடர்வாரா என்று தெரிந்து விடும்.

– இர தினகர்

President Trump facing tough challenges from his party colleagues for repealing Obama Care by passing a new health insurance bill. There are atleast 21 Republican House Representatives are against the new bill and 17 are undecided. If it goes for voting in next two days, it is expected to be defeated by few votes.

Author: admin
Tags

Similar posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!