இஸ்ரேலின் தலைநகர் ஜெருசலேம்.. ட்ரம்பின் அறிவிப்பும் பின்னணியும்! - VanakamIndia

இஸ்ரேலின் தலைநகர் ஜெருசலேம்.. ட்ரம்பின் அறிவிப்பும் பின்னணியும்!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இஸ்ரேலின் தலைநகர் ஜெருசலேம் என்று அறிவித்து, குளவிக் கூட்டில் கல்லெறிந்துள்ளார். இஸ்ரேலில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தையும் ஜெருசலேத்திற்கு மாற்றப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

சவுதி அரேபியா இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உள்நாட்டு அரசியலுக்காக, அமெரிக்க வெளியுறவு விவகாரத்தை கேலிக்குரியதாக்கி விட்டார் ட்ரம்ப் என்று அமெரிக்காவிலும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

மத்திய ஆசிய நாடுகளில் உள்ள ஆதரவு நாடுகளை, அமெரிக்காவுக்கு எதிராக திருப்பி விடும் வகையில் ட்ரம்பின் நடவடிக்கை அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

பாலஸ்தீன பிரச்சனைக்கு ஜெருசலேம் இல்லாமல் தீர்வு கிடையாது என்பதில் பாலஸ்தீனியர்கள் உறுதியாக இருக்கிறார்கள். கிழக்கு ஜெருசலேம் தலைநகராக அமையும் பட்சத்தில் தான் அமைதியான தீர்வு காண முடியும் என்பது அவர்களது நிலைப்பாடு.

ட்ரம்ப் தடாலடியாக ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்ததற்கு, ஐரோப்பிய யூனியன் கண்டனம் தெரிவித்துள்ளது. போப் ஆண்டவரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் அண்டோனியோ கட்டரெஸ் -ம் அமெரிக்காவின் இந்த முடிவு, நெடுங்காலமாக பின்பற்றப்படும் அமெரிக்க கொள்கைகளுக்கு எதிரானது என்று கூறியுள்ளார்.

ட்ரம்பின் மருமகன் ஜெராட் குஷ்னர், இஸ்ரேல் – பாலஸ்தீனிய சமாதான முயற்சியை மேற்கொண்டிருந்தார். இறுதியில் முற்றிலும் இஸ்ரேலுக்கு சாதகமான நிலைப்பாட்டை ட்ரம்ப் மேற்கொள்ள வைத்து விட்டார் என்று கூறப்படுகிறது. குஷ்னர் ஒரு இஸ்ரேலை பூர்விகமாகக் கொண்ட யூத குடும்பத்தைச் சார்ந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.

இஸ்லாமியர்களுக்கு எதிராகவும், சொந்த மருமகனுடைய இனத்திற்கு ஆதரவாகவும், முழுக்க முழுக்க சுயநலத்துடன் ட்ரம்பின் முடிவு இருக்கிறது என்று பலதரப்புகளிலிருந்தும் எதிர்ப்பு குரல்கள் வந்த வண்ணம் இருக்கிறது

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!