காமராஜர், அம்பேத்கர் சிலைகளுக்கு மரியாதை.. திருச்சி மாவட்ட ரஜினி ரசிகர்களின் அசத்தல் கொண்டாட்டம் - VanakamIndia

காமராஜர், அம்பேத்கர் சிலைகளுக்கு மரியாதை.. திருச்சி மாவட்ட ரஜினி ரசிகர்களின் அசத்தல் கொண்டாட்டம்

திருச்சி: ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு காமராஜர், அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்கள் திருச்சி மாவட்ட ரஜினி ரசிகர்கள். மேலும், கோவில்களில் சிறப்பு வழிபாடு, முதியோர்கள், மாணவர்கள், மாற்றுத் திறானாளிகள் மற்றும் மருத்துவமனைக்கு நலத்திட்டங்கள் என ரஜினியின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்கள். அது பற்றிய விவரம் வருமாறு,

ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி காலை காலை திருச்சியில் உள்ள அறிஞர் அண்ணா மற்றும் கர்மவீரர் காமராஜர் மற்றும் சட்டமேதை அம்பேத்கர் ஆகிய தலைவர்களுக்கு மாவட்ட மன்றத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

அன்று காலை 9மணிக்கு திருச்சி மலைக்கோட்டை ஸ்ரீமாணிக்க விநாயகர் திருக்கோவிலில் மாவட்டத் தலைவர் S.கர்ணன் பொருளாளர் M.நாசர் அமைப்பாளர் ராயல்ராஜூ முன்னிலையில் மாவட்ட மன்றம் சார்பில் ரஜினி நீண்ட ஆயுளுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும் இருந்து மக்கள் பணியாற்ற வேண்டும்ம என்று சிறப்பு அபிஷேக ஆராதனை நடை பெற்றது. வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து, காலை 11மணிக்கு ஸ்ரீரங்கம் ஸ்ரீமுனீஸ்வரன் திருக்கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து பிரசாதம் வழங்கப்பட்டது இதற்கான ஏற்பாடுகளை RK.காமராஜ் மற்றும் பூக்கடை சண்முகம் செய்திருந்தனர்.

அங்கிருந்து நேராக திருச்சி துவாக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்ற நிர்வாகிகள், நோயாளிகள் அமருவதற்கான இருக்கை ஒன்றை வழங்கினார்கள். மாவட்டத் தலைவர் S.கர்ணன் பொருளாளர் M.நாசர் அமைப்பாளர் ராயல்ராஜூ முன்னிலையில் தலைமை மருத்துவர் பெற்றுக்கொண்டார். ஏற்பாடுகளை சாமி.மாரியப்பன் செய்திருந்தார்.

அடுத்ததாக, நண்பகல் 1மணிக்கு திருச்சி வரகனேரி ஆசிரமத்திற்கு சென்ற நிர்வாகிகள், அங்கு தங்கி பயிலும் மாணவ மாணவிகளுக்கு மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்திருந்தார்கள். மாணவர்களுக்கு தேவையான நோட்டுகள், பேனா , பென்சில், ஸ்கேல், ரப்பர், ஜாமண்ட்ரி பாக்ஸ் உட்பட அத்தியாவசமான பொருட்களை வழங்கினார்கள். மாவட்ட தலைவர் S.கர்ணன் பொருளாளர் M.நாசர் அமைப்பாளர் ராயல்ராஜு கலந்து கொண்டு, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளும் நட்டார்கள். இதற்கான ஏற்பாடுகளை GS வாசன் ரஜினிமாயா மற்றும் நண்பர்கள் செய்திருந்தனர்.

மாலை ஆறு மணி அளவில், திருச்சி புத்தூர் அரசு பொது மருத்துவமனை எதிரே உள்ள பார்வையற்றோர் பள்ளிக்கு சென்றார்கள். அங்குள்ள மாணவ மாணவிகள் முன்னிலையில் ரஜினியின் பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. மாணவர்களுக்கு சோப்பு சீப்பு பேஸ்ட் பிரஸ் எண்ணெய் பாக்கெட்டுகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களும், இனிப்புகளும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வரகனேரி L.பழனி செய்திருந்தார்.

முன்னதாக, டிசம்பர் 11 திங்கட்கிழமைகாலை 9மணிக்கு ஸ்ரீரங்கம் ஸ்ரீராகவேந்திரர் திருக்கோவிலில் முன்னிலையில் ரஜினியின் நீண்ட ஆயுள் வேண்டி வெள்ளி தேர் இழுத்து சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து பிரசாதம் வழங்கப்பட்டது. மாவட்டத் தலைவர் S.கர்ணன் பொருளாளர் M.நாசர் அமைப்பாளர் ராயல்ராஜூ பங்கேற்ற இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் நகர மன்ற தலைவர் ஸ்வீட் ரமேஷ் செய்திருந்தார்.

அன்று காலை 11மணிக்கு ஸ்ரீரங்கம் கங்காரு முதியோர் காப்பகத்தில் முதியோர்களுக்கு, Sp.தங்கராஜ் ஏற்பாட்டில் சோப்பு சீப்பு பேஸ்ட் பிரஷ் எண்ணெய் பாக்கெட்டுகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. மதியம் 1 மணிக்கு இலால்குடி சிறப்புப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மதிய விருந்து மற்றும் நோட்டு பேனா பென்சில் வழங்கப்பட்டது ஏற்பாடுகளை இலால்குடி EPE.ராஜா மற்றும் விடிவெள்ளி ராஜ்குமார் செய்திருந்தார்.

அனைத்து நிகழ்ச்சிகளிலும் திருச்சி மாவட்டத் தலைவர் S.கர்ணன் பொருளாளர் M.நாசர், அமைப்பாளர் ராயல்ராஜூ ஆகியோர் பங்கேற்று சிறப்பு செய்தனர்.

– வணக்கம் இந்தியா செய்திகள்

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!