என் ஆளோட செருப்ப காணோம், தீரன் அதிகாரம் ஒன்று.. வெள்ளிக்கிழமை ரிலீஸ்! - VanakamIndia

என் ஆளோட செருப்ப காணோம், தீரன் அதிகாரம் ஒன்று.. வெள்ளிக்கிழமை ரிலீஸ்!

இன்று வெள்ளிக்கிழமை மூன்று புதிய தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன. அவை என் ஆளோட செருப்ப காணோம், தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் வனபத்ரகாளி.

என் ஆளோட செருப்பக் காணோம் படத்தில் பசங்க படத்தில் பக்கோடா பாண்டியாக நடித்தவர் தமிழ் என்ற பெயரில் ஹீரோவாக நடித்துள்ளார். ஆனந்தி நாயகியாக தோன்றுகிறார்.

காணாமல் போகும் காதலியின் செருப்பைத் தேடும் நாயகனின் கதை. அதை காதல், நகைச்சுவை, மழை கலந்து கொடுத்திருக்குறார் இயக்குநர் ஜெகன் நாத். இதற்கு முன் விஜய்யை வைத்து புதிய கீதை படம் தந்தவர். கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை படங்களின் இயக்குநர். இளைஞர்களுக்கு, குறிப்பாக காதலர்களுக்கு ஸ்பெஷலாக இருக்கும் இந்தப் படம் என்கிறார்கள்.

தீரன் அதிகாரம் ஒன்று கார்த்தி நடித்துள்ள 3வது போலீஸ் படம். இது நல்ல போலீஸ் பற்றிய கதை என்று அறிவித்திருக்கிறார்கள். ரகுல் ப்ரீத் சிங் நாயகியாக நடித்துள்ளார். சதுரங்க வேட்டை வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். ட்ரீம் வாரியர், ரிலையன்ஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன. 300-க்கும் அதிகமான அரங்குகளில் இந்தப் படத்தை வெளியிட்டுள்ளனர்.

மேச்சேரி வன பத்ரகாளி என்ற பெயரில் ஒரு புதிய படமும் இன்று வெளியாகிறது. கேஎம் ஆனந்தன் இயக்கியுள்ளார். அம்மன் வேடத்தில் சீதா நடித்துள்ளார். அம்மனுக்கே சென்சாரா என்ற கேப்ஷனுடன் இன்று விளம்பரம் வெளியிட்டுள்ளனர். இந்தப் படத்துக்கும் ஓரளவு அரங்குகள் கிடைத்துள்ளன.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!