மூன்று ஆண்டுகளில் மூன்று லட்சம் புதிய வேலைகள் மட்டுமே.. மோடி அரசின் சாதனை! - VanakamIndia

மூன்று ஆண்டுகளில் மூன்று லட்சம் புதிய வேலைகள் மட்டுமே.. மோடி அரசின் சாதனை!

ஐடி துறையில் மட்டும் வேலை இழப்பு என்று சொல்லி இங்கே நடந்து கொண்டிருக்கிற ஒட்டுமொத்த சரிவையும் மறைக்கிறார்கள். பணமுடக்கில் இருந்து எவ்வளவு வேலைகள் இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.

குறிப்பாக தனியார் மற்றும் முறைசாரா தொழில்களில். ஐடி துறை மீடியாக்களின் டார்லிங். பத்ரி மாதிரி ஆட்கள் அதெல்லாம் ஒண்ணுமில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் NEET, பணமுடக்கு, குஜராத் கொலைகள் என்று எல்லாவற்றிலும் மோடியின் கண்கள் வழியே அவரின் சப்பாத்துக்களில் நின்று பார்க்கிறார்கள்.

அதனால் கிரிமினல்கள் ஒன்று போல சிந்திப்பது ஒன்றும் தவறில்லை. இது வரை அறிவிக்கப்பட்ட வேலை இழப்புகள் மோடி பதவியேற்றபின் உருவாகியுள்ள வேலை வாய்ப்புகள் பற்றிய தரவுகள் பொது வெளியில் தான் இருக்கிறது.

வெறும் மூன்று லட்சம் வேலைகள் மட்டுமே உருவாகியுள்ளது என்று அறிக்கைகள் சொல்கிறது.

மற்ற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு படை எடுக்கக் காரணம் சொல்லத் தேவையில்லை. இங்கே தொழிலாளிகளின் ஊதியம் அதிகம். வேளாண்மை போன்ற துறைகள் வேலைக்கு ஆளெல்லாம் வைத்து பார்க்க முடியாது. ஆனால் இந்தியாவில் மராட்டியம் தவிர பிற மாநிலங்களில் ஊதியம் சொற்பமே. வேலை நேரமும் அதிகம். அதனால் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடுகிறார்கள்.

தமிழகத்தில் இருந்து வெளிநாட்டிற்கு நிறைய ஆட்கள் செல்ல திறன்களும் ஆங்கிலமும் இதுவரை உதவியே வந்துள்ளது.

சாய்நாத் சொல்வதில் விவசாயத்தில் இருந்து நகரங்களுக்கு இடம்பெயரும் கல்வி அறிவு அற்ற மக்கள் பாலியல் தொழிலில் தள்ளப்படுவது முதல் கிரிமினல்களாக ஆக்கப்படுவது வரை பல்வேறு சிக்கல்களை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

அடிப்படைத் தொழில்களை இடம்பெயர்த்துக் கொண்டே இருப்பதால் நகரங்கள் குற்றப் பெருக்கத்திற்கு வழி வகை செய்கிறது. ஒரு உதாரணம். அமெரிக்காவில் கறுப்பின மக்கள் கிராமங்களில் தோட்டங்களில் வேலை செய்த போது அமெரிக்க சட்டம் அவர்களை கிரிமினல்களாக நடத்தவில்லை. நிலப்பிரபுக்கள் அடிமையாக நடத்தினார்கள் என்பது உண்மை.

ஆனால் நகர வளர்ச்சியில் அவர்கள் கிரிமினல்களாக எப்போதும் தங்களை சட்டத்தின் முன் தற்காத்த்துக் கொள்ள முடியாதவர்களாகவே அரசு வைத்துள்ளது. வெறும் வேலை வாய்ப்புகள் மட்டுமன்றி மக்களின் இடப்பெயர்வு என்பதன் சமூக சிக்கல்களின் பட்டியல் பெரிது.

ஐடி போன்ற துறைகள் நகரமயமாதலின் குறியீடுகள் தான். ஐபிஎல் போல. அவை குறிப்பிட்ட நகரங்களின் வழியாக மாதிரி கனவு வாழ்க்கையை கட்டமைப்பவை. இந்த மாயத்தில் மக்கள் படும் நிச்சயமற்ற வாழ்க்கையினை மறந்து விடுகிறோம். அது தரும் சோர்வு தனிமை என்று பெரிய பட்டியல் இருக்கிறது.

ஆனால் மோடி மேன்செஸ்ட்டர் குண்டுவெடிப்புகளை கண்டித்துவிட்டார். ஜார்கண்ட்டில் நடந்த இஸ்லாமியக் கொலைகளைப் பற்றி வாய் திறக்கவில்லை. எல்லா கொலைகளும் ஒன்றல்ல. இஸ்லாமியர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்று ஆழமாக நம்பும் கூட்டு மனசாட்சியின் உருவகமே மோடி.

தொழில் சூழல் மாறிக் கொண்டிருப்பது போல மக்களின் கூட்டு மனசாட்சியின் கொலைக்கான அளவுகோலும் உருவாகி வருகிறது. மோடி அதன் குறியீடு. கிரிமினல்கள் எல்லோருக்கும் கொலைகளைப் பற்றியே சிந்தனை.

– இளங்கோ கல்லணை

Sources say , there are only three lakhs new jobs created during the last three years of BJP rule.

Author: admin
Tags

Similar posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!