திருட்டுப்பயலே 2 - விமர்சனம் - VanakamIndia

திருட்டுப்பயலே 2 – விமர்சனம்

கரை படியாத காவல் துறை அதிகாரியாக வலம் வருகிறார் பாபிசிம்ஹா . நேர்மை காரணமாக பல இடங்களுக்கு ட்ரான்ஸ்பர் செய்யப்படுகிறார். அப்படியாக காரைக்குடியில் இன்ஸ்பெக்டராக பணிபுரியும் போது பக்கத்து வீட்டில் தங்கியிருந்த அமலா பாலை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்.

பிறகு சென்னைக்கு நுண்ணறிவு பிரிவிற்கு மாற்றப்படுகிறார் பாபி சிம்ஹா. பெரிய பெரிய தலைவர்களின் போன்களை ஒட்டு கேட்கும் வேலை இவரிடம் கொடுக்கப்படுகிறது.

அப்போது அரசியல் வாதிகளின் போன்களை ஒட்டு கேட்டு அவர்களிடம் பல கோடிகளை சுருட்டிக் கொள்கிறார் பாபி. பேஸ்புக்கத்திற்கு அடிமையான அமலா பால் அதன் மூலம் பிரசன்னாவின் நட்பை பெறுகிறார். பல பெண்களை கவர்ந்து அவர்களை தன் வலைக்குள் இழுத்து போடும் திறமை படைத்தவர் பிரசன்னா.

ஒருநாள் அமலாபாலின் போனை ஒட்டு கேட்கும் பாபி, பிரசன்னா அமலா பாலை மிரட்டுவதை கண்டுபிடிக்கிறார். பின், பாபிக்கும் பிரசன்னாவிற்கும் நடக்கும் ஆடுபுலி ஆட்டமே இந்த ‘திருட்டுபயலே 2’.

கருப்பனுக்கு பிறகு ஒரு வலுவான ஹீரோ பாத்திரத்தை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார். அமலாபாலுடன் காதல் காட்சிகளில் “ஏன்…?? ஏன்….??? இந்த மூஞ்சில ரொமன்ஸ் மட்டும் வர மாட்டேங்குது” என பாபியை கேட்க வைக்கிறது.

அமலாபால் ஆங்காங்கே சில பல கவர்ச்சிகளை சிதற விட்டு அவரது ரசிகர்களை சோர்வடையாமல் பார்த்து கொள்கிறார்.

பல படங்களுக்கு பிறகு பிரசன்னா மிகவும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கதைகளை இப்போதுதான் சரியாக தேர்வு செய்ய ஆரம்பித்திருக்கிறார் போல.. வாழ்த்துக்கள் பிரசன்னா..

இளைய தலைமுறைகளை டார்கெட் வைத்து இப்படத்தை இயக்கியுள்ளார் சுசி கணேசன். அதற்காக பாராட்டுகளை தெரிவித்துக் கொள்ளலாம். அடுத்து என்ன நடக்கும் என்பதை ரசிகர்கள் யூகிக்கும் படியாக திரைக்கதை அமைத்ததில் சற்று சறுக்கல் அடைந்திருக்கிறார் இயக்குனர். இரண்டாம் பாதியில் கதையை சற்று இழுத்தடிப்பது போர் அடிக்க வைக்கிறது.

என்னதான் இருந்தாலும் முதல் பாகத்தை போல் இல்லையே என்ற ஏக்கத்தை ‘திருட்டுப் பயலே 2’ கொடுத்து விட்டுதான் செல்கிறது.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!