தமிழகத்தில்தான் முதலில் சிஸ்டத்தை சரி செய்யணும்! - ரஜினிகாந்த் - VanakamIndia

தமிழகத்தில்தான் முதலில் சிஸ்டத்தை சரி செய்யணும்! – ரஜினிகாந்த்

சென்னை: தமிழகத்தில்தான் முதலில் சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த், “நான் அரசியலில் ஈடுபடுவது உறுதி. தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம். சட்டசபை தேர்தலில் கட்சி ஆரம்பிக்கப்படும்,” என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இன்று போயஸ் கார்டனில் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினியிடம், “சிஸ்டம் சரியில்லை என்றால் இந்தியாவிலா அல்லது தமிழகத்திலா? கேட்டதற்கு, “தமிழகத்தில்தான் சிஸ்டம் சரியில்லை. தமிழகத்தில்தான் முதலில் சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும்.

கமலுடன் இணைந்து பணியாற்றுவது என்பது காலம்தான் பதில் சொல்லும்.

நாடாளுமன்றத் தேர்தல் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்படும்,” என்றார்.

முதலில் காலா அல்லது 2.0 ஆகிய படங்களில் எது முதலில் வெளியாகுமா என்ற கேள்விக்கு, “2.0 படத்தில் கிராபிக்ஸ் பணிகள் முடியவில்லை. எனவே எது முதலில் வெளியாகும் என்பது இன்னும் 2 நாட்களில் தெரியும்,” என்றார்.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!