தஞ்சாவூரில் விடிய விடிய மழை... மூழ்கிய சம்பா பயிர்கள்! - VanakamIndia

தஞ்சாவூரில் விடிய விடிய மழை… மூழ்கிய சம்பா பயிர்கள்!

தமிழகத்தில் சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. பல மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை நல்ல மழை பொழிவை பொழிந்து வருகிறது. டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் இன்று 6-வது நாளாக தொடர் மழை பெய்து வருகிறது.

தஞ்சை மாவட்டத்தை பொருத்த வரையில் பகலில் விட்டு விட்டு மழை பெய்தாலும்
இரவில் பல இடங்களில் கனமழை பெய்தது.

இந்த மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது.

தற்போது விவசாயிகள் சம்பா சாகுபடி செய்துள்ளனர். சம்பா பயிர் வளர்ந்து வரும் நிலையில் தொடர் மழை பெய்து வருவதால் கும்பகோணம், பட்டீஸ்வரம் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் மழை நீரில் மூழ்கி உள்ளன.

கும்பகோணம், பாபநாசம், பூதலூர், அய்யம்பேட்டை உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இன்றும் மழை பெய்து வருகிறது.

திருவாரூர் மாவட்டத்திலும் தொடர் மழை பெய்து வருகிறது. திருவாரூர், மன்னார்குடி, திருதுறைப்பூண்டி, நன்னிலம், பேரளம் ஆகிய இடங்களில் 5 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் மழை நீரில் மூழ்கி உள்ளன. மழை நீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்திலும் தொடர் மழையால் அனைத்து இடங்களும் வெள்ளக்காடாக காட்சி தருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. தொடர் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

இந்த மழை காரணமாக 30 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் மழையில் மூழ்கி உள்ளன. இந்த மழை மேலும் நீடித்தால் பயிர்கள் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

தற்போது சம்பா பயிர்களை காப்பாற்ற மழை நீரை வடியவைத்து வருகின்றனர். ஆனால் மழை பெய்து வருவதால் மழை நீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!