தமிழக மீனவர்கள் 32 பேர் கைது; இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்! - VanakamIndia

தமிழக மீனவர்கள் 32 பேர் கைது; இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே நெடுந்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் சுமார் 32 பேரை கைது செய்துள்ளது இலங்கை கடற்படை.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் நெடுந்தீவு அருகே கடலுக்கு மின் படிக்க சென்றபோது இலங்கை கடற்படை அவர்களை நோக்கி சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளது.

அப்போது ஜகதாபட்டிணத்தை சேர்ந்த 5 படகுகள் மற்றும் 20 மீனவர்கள், மற்றம் ராமநாதபுரம், நாகை மாவட்டங்களை சேர்ந்த பல படகுகள் மற்றம் மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து வைத்துள்ளதாகவும் தகவல் தெரியவந்துள்ளது. இதில் 32 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகப்பட்டினம் ஆகிய பகுதியில் உள்ள மீனவ கிராமத்தினர் மத்தியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!