காவிரிப் பிரச்சினை... ரஜினி குரல் கொடுக்க வேண்டும்! - தமிழிசை - VanakamIndia

காவிரிப் பிரச்சினை… ரஜினி குரல் கொடுக்க வேண்டும்! – தமிழிசை

காவிரி பிரச்னையில் தமிழர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில், இரு மாநிலங்களுக்கும் பொதுவாக உள்ள ரஜினிகாந்த் போன்ற பிரபலங்கள் குரல் கொடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தினார்.

கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து தமிழக பாஜக சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது:

கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதை தமிழக பாஜக ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது. சுமார் ஒரு லட்சம் தமிழர்கள் கர்நாடக எல்லைகளை கடந்து தமிழகத்துக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிக்கப்பட்டுள்ளன. ஆனால் தமிழகத்தில் வாழும் கன்னடர்கள் மீது எந்தத் தாக்குதலும் நடத்தப்படவில்லை. அவர்கள் இங்கு பாதுகாப்பாக உள்ளனர். தமிழர்கள் இங்கு பெருந்தன்மையாக நடந்து கொள்கிறார்கள்.

கர்நாடகத்தில் ஒருசில கட்சிகளே கலவரத்தை தூண்டி விடுகின்றன. இரண்டு மாநில மக்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்த பிரதமர் நரேந்திர மோடி முயற்சி செய்து வருகிறார். தேச ஒற்றுமையை பாதுகாக்க பாஜக தொடர்ந்து பாடுபடும்,” என்றார்.

Author: admin
Tags

Similar posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!