ரஜினி - தமிழருவி மணியன் திடீர் சந்திப்பு - VanakamIndia

ரஜினி – தமிழருவி மணியன் திடீர் சந்திப்பு


சென்னை: நடிகர் ரஜினிகாந்த்துடன் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் திடீரென சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

ரஜினிகாந்த்தின் சென்னை போயஸ் இல்லத்தில் இந்த சந்திப்பு நேற்று பிற்பகல் நடைபெற்றது.

ரஜினிகாந்த் வருகிற டிசம்பர் 26ம் தேதி முதல் 31ம் தேதி வரை கோடம்பாக்கத்தில் உள்ள தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்களை சந்திக்க உள்ளார்.

ரஜினி தனது ரசிகர்களுடான சந்திப்பில் அரசியல் கட்சி பற்றி அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ரஜினியை அரசியல் களத்தில் இறக்கி, தமிழகத்தில் புதிய மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என அவுத்தமாக நம்புகிறார் தமிழருவி மணியன். இந்த நிலையில் அவர் ரஜினியை மீண்டும் சந்தித்துள்ளார்.

இதன் மூலம் ரசிகர்கள் சந்திப்பின்போது அரசியல் அறிவிப்பு வெளியிடுவது குறித்து இருவரும் ஆலோசித்திருக்கலாம் எனத் தெரிகிறது.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!