அமெரிக்கத் தமிழர்களே.. இந்த 17 வயது தமிழ்ப் பெண்ணை கண்டுபிடிக்க உதவுங்கள்.. - VanakamIndia

அமெரிக்கத் தமிழர்களே.. இந்த 17 வயது தமிழ்ப் பெண்ணை கண்டுபிடிக்க உதவுங்கள்..

மில்வாக்கி(யு.எஸ்): 17 வயது அமெரிக்கத் தமிழ் பெண் ’பக்தி அன்பரசன்’, கடந்த 10 நாட்களாக காணவில்லை. ஜூலை 4ம் தேதி வரையிலும் மில்வாக்கியில் இருந்தார். ஐந்து அடி 6 அங்குலம் உயரம் உடைய , கருப்பு நிற கண்களை உடையவர். 2000ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி பிறந்தவர். காது குத்தப்பட்டிருக்கும். அவருக்கு மருத்துவ உதவி தேவைப்படலாம்.

குழந்தைகள் காணாமல் போவது அமெரிக்காவில் அவ்வப்போது நடைபெறுகிறது. தமிழ்ப் பெண் ஒருவர் காணாமல் போனதாக இதுவரையிலும் தெரியவில்லை. தமிழ் சமூகத்திற்கு இது பேரிடியாக இருக்கிறது.

தகவல் தெரிந்தவுடன் சம்மந்தப்பட்ட அமைப்புடன் தொடர்பு கொண்டு விசாரித்தோம். காணாமல் போனது உண்மை என்று உறுதியாக தெரிந்த பிறகே இந்த செய்தியை வெளியிடுகிறோம்.

பக்தி அன்பரசனைப் பற்றி தகவல் தெரிந்தால் 1-800-843-5678( 1-800 -THE-LOST) அல்லது காவல்துறை அலுவலகத்திற்கு 1-262-532-8700 என்ற எண்ணில் தெரியப்படுத்துங்கள்.

சிறிய தகவல் என்று நினைப்பது கூட, ஏற்கனவே புலனாய்வுப் பிரிவிடம் இருக்கும் தகவல்களுடன் சேரும் போது, பெரும் உதவியாக இருக்கலாம். உறவினர்கள், நண்பர்கள், பெரிய குழந்தைகள் என அனைவரிடமும் தகவலை தெரிவியுங்கள். இணைக்கப்பட்டுள்ள படத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.

பக்தி அன்பரசன் விரைவில் நலமுடன் வந்து குடும்பத்துடன் சேரட்டும். பிரிந்த பெற்றோர்கள் மனம் குளிரட்டும்.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!