தமிழ் வேண்டும்... - VanakamIndia

தமிழ் வேண்டும்…

அதிகாலை பனியெலாம்
தமிழ் எழிலை போற்ற வேண்டும்
அந்திநேர வானெலாம்
தமிழ் வண்ணம் பூண வேண்டும்

பாருக்குள் பொருளெலாம்
தமிழ் எனவே மாற வேண்டும்
பறவைகள் ஒலியெலாம்
தமிழ் வாழ்த்து ஆக வேண்டும்

மரங்களின் அசைவெலாம்
தமிழ் நடனம் புரிய வேண்டும்
மலைகளின் முடுக்கெலாம்
தமிழ் பேச்சு கேட்க வேண்டும்

நிலமுள்ள இடமெலாம்
தமிழ் மழை பெய்ய வேண்டும்
நீருள்ள இடமெலாம்
தமிழ் வளம் பெருக வேண்டும்

கதிரவன் ஒளியெலாம்
தமிழ் விதை முளைக்க வேண்டும்
காற்றாடும் வெளியெலாம்
தமிழ் நாதம் முழங்க வேண்டும்

மலர்களின் மணமெலாம்
தமிழ் வாசம் வீச வேண்டும்
மழலைகள் விரலெலாம்
தமிழ் எழுத்து வரைய வேண்டும்

எங்கும் புவியெலாம்
தமிழ் வேர் பாய வேண்டும்
என்றும் இனியெலாம்
தமிழ் மொழி தழைக்க வேண்டும்

-புவனா கருணாகரன்

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!