முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ’ ஹார்வர்ட் தமிழ் இருக்கை’ டாக்டர் ஜானகிராமன் நன்றி! - VanakamIndia

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ’ ஹார்வர்ட் தமிழ் இருக்கை’ டாக்டர் ஜானகிராமன் நன்றி!

தமிழக முதல்வருக்கு நன்றி

ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்காக தமிழக அரசின் சார்பில் 10 கோடி ரூபாய் நன்கொடை வழங்கிய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, டாக்டர் ஜானகிராமன் நன்றி தெரிவித்தார்.

பாஸ்டன்: ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு நிதியுதவி வழங்கிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு , ஹார்வர்ட் தமிழ் இருக்கை நிறுவனர் டாக்டர் ஜானகிராமன் நன்றி தெரிவித்துள்ளார்.

பாஸ்டன் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்திலிருந்து வீடியோ மூலம் டாக்டர் ஜானகிராமன் கூறியுள்ளதாவது:

“வணக்கம், நான் டாக்டர் ஜானகி ராமன். தமிழக அரசின் முதல்வர் மாண்புமிக எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கும், அவரது தலைமையின் கீழ் திறமையாக நடைபெற்று வரும் தமிழக அரசுக்கும் குறிப்பாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் அவர்களுக்கும் தமிழ் இருக்கை குழுவின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வளவு துரிதமாக, தமிழ் இருக்கைக்காக பத்து கோடி ரூபாய் வழங்கியதற்கு அனைவரும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். வாழ்க வணக்கம்” என்று டாக்டர் ஜானகி ராமன் வீடியோ மூலம் நன்றி தெரிவித்துள்ளார்

தமிழ் இருக்கையின் மற்றுமொரு நிறுவனரான டாக்டர் சம்பந்தம், தமிழ் இருக்கை நிர்வாகக் குழு உறுப்பினர் புரவலர் பால்பாண்டியன், செயலாளர் டாக்டர் சொர்ணம் சங்கர், க்ளோபல் ஒருங்கிணப்பாளர் வெற்றிச்செல்வன் உடன் இருந்தார்கள்.

டாக்டர் ஜானகிராமனும், டாக்டர் சம்பந்தம் இருவரும் தலா 500 ஆயிரம் நன்கொடை வழங்கி ஹார்வர்ட் தமிழ் இருக்கை முயற்சியை தொடங்கினார்கள் . அந்த முயற்சியில் ’சங்க இலக்கிய மொழிபெயர்ப்பாளர்’ தமிழ் நாட்டைச் சார்ந்த வைதேகி ஹெர்பர்ட்-ம் முக்கிய பங்கு ஆற்றினார் என்பதுவும் குறிப்பிடத் தக்கது.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!