Taiwan earthquake kills 6 people

தைவானில் நிலநடுக்கம்.. 6 பேர் பலி 60 பேரைக் காணவில்லை


வாலின்: தைவானில் ஏற்பட்ட 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பலத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுவரையிலும் 6 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. 60 பேர் காணவில்லை. சுமார் 250 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

4 பெரிய கட்டிடங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. காணாமல் போனவர்கள், கட்டிட இடுபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. கடந்த 40 ஆண்டுகளில் வாலின் நகரத்தில் ஏற்பட்ட மிகவும் மோசமான நில நடுக்கம் இது என்று கூறப்படுகிறது.

சுமார் ஒரு லட்சம் வீடுகள் உள்ள வாலின் நகரத்தில், நிலநடுக்கம் காரணமாக குடிநீர் , மின்சாரம் தடைபட்டுள்ளது. 40 ஆயிரம் வீடுகளுக்கு இன்னும் குடிநீர் இல்லை. 2 ஆயிரம் குடும்பங்களுக்கு மின்சாரம் இல்லை. அசுர வேகத்தில் அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த இரு வாரங்களுக்குள் 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. தைவான் மக்களுக்கு அரசின் இந்த அறிவிப்பு மேலும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!