புத்தாண்டின் முதல் நாளே வேகமெடுத்த 'தலைவர்' ரஜினிகாந்த்! - VanakamIndia

புத்தாண்டின் முதல் நாளே வேகமெடுத்த ‘தலைவர்’ ரஜினிகாந்த்!

சென்னை: புத்தாண்டின் முதல் நாளான இன்று காலை முதல் ரஜினிகாந்தின் அரசியல் ரீதியான செயல்பாடுகள் வேகமெடுத்துள்ளன.

தமிழ் நாட்டின் ஒவ்வொரு நகரம், கிராமம், தெருக்களிலும் ரஜினி மன்றம் இருக்க வேண்டும் என்று நேற்று அறிவித்தார் அல்லவா… அதற்கான முதல் கட்ட வேலையை ரஜினி ஜனவரி 1-ம் தேதி ஆரம்பித்தார்.

முதல் கட்டமாக ஏற்கெனவே உள்ள உறுப்பினர்கள் மற்றும் புதிய உறுப்பினர்களைப் பதிவு செய்வதற்கான செயலி மற்றும் இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

Rajinimandram செயலியை மொபைலில் பதிவிறக்கம் செய்து கொண்டு தங்கள் பெயர், வாக்காளர் அடையாள அட்டை விவரங்களைப் பதிவு செய்து உறுப்பினர் ஆகலாம்.

இணையதளம் மூலம் பதிவு செய்ய www.rajinimanram.org எனும் தளத்துக்குச் செல்லவும்.

rajinimandram.org இணையதளப் பக்கம்

ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து

முன்னதாக ஜனவரி முதல் நாளன்று காலை தன்னை போயஸ் இல்லத்தில் வந்து சந்திக்கக் காத்திருந்த ரசிகர்கள் முன் தோன்றினார் ரஜினி. வெள்ளை வேட்டி சட்டையில் வந்த அவர் வந்திருந்த ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக் கூறினார்.

-வணக்கம் இந்தியா

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!