’மதுரைன்னாலே வீரம்தான கண்ணா...’ 3-வது நாளில் ரசிகர்கள் மத்தியில் ரஜினியின் பேச்சு! - VanakamIndia

’மதுரைன்னாலே வீரம்தான கண்ணா…’ 3-வது நாளில் ரசிகர்கள் மத்தியில் ரஜினியின் பேச்சு!

சென்னை: கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில், 3வது நாளாக ரசிகர்களுடன் நடிகர் ரஜினி சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்து வருகிறார். இன்று மதுரை, விருதுநகர், சேலம், நாமக்கல் மாவட்ட ரசிகர்களை சந்தித்து வருகிறார்.

மதுரை என்றால் வீரத்திற்கு அடையாளம். 1977-ல் ஒரு முறை மதுரை வந்திருக்கிறேன். எனது நட்சத்திரம் பெருமாள் நட்சத்திரம் என்பதை அன்று தான் தெரிந்து கொண்டேன்.

ரசிகர்களுக்கு அசைவ உணவு விருந்து அளிக்க ஆசை, ஆனால், ராகவேந்திரா மண்டபத்தில் சைவ உணவுக்கு மட்டுமே அனுமதி. அசைவ உணவிற்கு வேறு ஒரு இடம் பார்த்து அங்கு நாம பார்த்துக்கலாம்.

உங்களை பார்க்கும் போது எனக்குள் ஒரு மகிழ்ச்சி, சந்தோஷம் கிடைக்கிறது. உங்களை பார்க்கும் போது உங்களுடைய உற்சாகம், உணர்ச்சிகளை புரிந்து கொள்ள முடிகிறது. நானும் உங்க வயதை, சினிமா ரசிகன் என்பதை தாண்டி தான் இங்கு வந்துள்ளேன். சிறு வயதில் நான் ராஜ்குமாரின் ரசிகனாக இருந்தவன் தான்.

கடவுள், தாய் மற்றும் தந்தையின் காலில் மட்டும்தான் விழ வேண்டும். உயிர் கொடுத்த கடவுள், அந்த உயிர்க்கு உடல் கொடுத்த தாய், தந்தை ஆகியோர் கால்களில் மட்டுமே விழ வேண்டும். பணம், பெயர், புகழ் வைத்திருப்பவர்கள் கால்களில் விழ வேண்டும் என்ற அவசியல் இல்லை.’ என்று கூறினார்.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!