சிறுவர்கள் / இளைஞர்களுக்காக ஒரு சிறப்புப் பக்கம்... - VanakamIndia

சிறுவர்கள் / இளைஞர்களுக்காக ஒரு சிறப்புப் பக்கம்…

சிறுவர்கள், குறிப்பாக மாணவர்களின் படைப்பாற்றல் அபாரமானது. ஆனால் பெரும்பாலானோர் அதைக் கண்டுகொள்வதே இல்லை. பிரதான காரணம் நேரமின்மை. இந்த கண்டுகொள்ளாமைதான் துடிப்பான மாணவர்களை / இளைஞர்களை வேறு பாதைக்குத் திருப்புகிறது அல்லது சோம்பேறியாக்குகிறது.

இந்தத் தலைமுறையில் ஒரு மாணவன் / இளைஞனின் படைப்பு அல்லது கற்பனை அல்லது ஆற்றல் வீணாகிவிடக் கூடாது என்பதே நம் அவா. எனவே இளம் தளிர்களின் திறமையை அங்கீகரித்து ஊக்கப்படுத்த இந்தப் பக்கத்தைத் தொடங்குகிறோம்.

இதில் மாணவர்கள் / இளைஞர்களின் அனைத்து வித பங்களிப்பையும் ஏற்கத் தயாராக உள்ளோம், சும்மா இல்லை.. ஊக்கப் பரிசுகளுடன்.

‘ஊக்குவிக்க ஆளிருந்தால் ஊக்கு விப்பவனும் தேக்கு விப்பான்’ என்ற காவியக் கவி வாலியின் வரிகளை வாழ்த்தாக்கி இந்தப் பகுதியைத் தொடங்குகிறோம்…

– முதன்மை ஆசிரியர்
வணக்கம் இந்தியா

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!