செல்ஃபி புள்ளைகளுக்காக... டபுள் செல்ஃபி கேமரா செல்போன் விரைவில் அறிமுகம்.! - VanakamIndia

செல்ஃபி புள்ளைகளுக்காக… டபுள் செல்ஃபி கேமரா செல்போன் விரைவில் அறிமுகம்.!

பல புதிய மாடல் மொபைல்களை அறிமுகம் செய்வதில் முன்னனி நிறுவனமாக திகழ்ந்து வருகிறது எல்ஜி. அந்த வகையில் தனது அடுத்த மாடலாக எல்ஜி ஃபிளாக்‌ஷிப் என்ற மாடலை இந்நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

இதில் பல புதிய தொழில்நுட்ப வசதிகள் புகுத்தப்பட்டுள்ளனர். இந்த புதிய ஸ்மார்ட்போன்கள் எல்ஜி ஜி6 என அழைக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதில் எந்த மொபைலிலும் இல்லாத வசதியாக டபுள் செல்பி கேமரா வழங்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளன.

இந்த எல்ஜி ஜி6 மாடலின் முன்பக்க பேனல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் இரட்டை செல்பி கேமரா இடம் பெறும் என தெரியவந்துள்ளது.

சிறப்பம்சங்களை பொருத்த வரை எல்ஜி வி30 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் மற்றும் 6 ஜிபி ரேம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

முன்னதாக எல்ஜி நிறுவனத்தின் ஜி6 ஸ்மார்ட்போன் கடந்த மாதம் நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனில் பல்வேறு புதிய சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டிருந்த நிலையில் கொரியாவில் முதல் நாள் விற்பனையில் 20,000 எல்ஜி ஜி6 ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!