சீமான் நீங்க அரசியல்வாதி தான்.. அதுக்காக இம்புட்டு பல்டி அடிச்சா எப்படி? - VanakamIndia

சீமான் நீங்க அரசியல்வாதி தான்.. அதுக்காக இம்புட்டு பல்டி அடிச்சா எப்படி?

சென்னை: என் கையில் ஆட்சியைக் கொடுங்கள் தமிழகத்தில் தேனும் பாலும் ஓடும் என்றெல்லாம் சவடாலாக பேசும் சீமான் எந்த ஒரு விஷயத்திலும் எடுத்த நிலைப்பாட்டில் நீடித்து இருப்பதில்லை என்பது புதிதில்லை.

அரசியல் கட்சி என்றால் ஒத்த கருத்துடைய கட்சியுடன் தோழமை பாராட்டுவதும், எதிர்தரப்பு கட்சிகளின் கொள்கைகளை எதிர்ப்பது தான் வழக்கம்.

நாம் தமிழர் கட்சியின் சீமான், எப்போ யாரை எப்படி பாராட்டுவாருன்னும் தெரியாது. பாராட்டியவரையே எப்போ தூக்கி போட்டு மிதிப்பாருன்னும் தெரியாது.

ஜெயலலிதாவை புரட்சித் தலைவி, ஈழத்தாய் என்றெல்லாம் வானாளவப் புகழ்ந்து விட்டு, அவர் இறந்தவுடன் அப்போதைய முதல்வர் பன்னீர்செல்வத்தை ஆஹோ ஓஹோ என்று புகழ்ந்தார். கட்சித் தலைவி இறந்து விட்டார். அதனால், அடுத்து பதவியில் இருப்பவரை புகழ்ந்தார் என்று கூட எடுத்துக் கொள்ளலாம்.

கொஞ்ச நாள் தான்.. எந்த பன்னீர் செல்வத்தை பாராட்டினாரோ, அதே பன்னீர் செல்வத்தின் பதவியை பறித்து தான் அந்த இடத்தில் முதல்வராக துடித்த சசிகலாவை இன்னும் ஒரு படி மேலே போய் புகழ்ந்தார்.

சசிகலா சிறைக்குப் போயாச்சு.. அடுத்து முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி தான் இப்போ சீமானின் ஃபேவரைட் தலைவர் ஆகிவிட்டார். எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி ஜெயலலிதாவின் ஆட்சியை விட நல்லா இருக்காம்.

எப்படி?. எந்த ஜெயலலிதா நீட் தேர்வு, ஜிஎஸ்டி, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக மத்திய அரசுடன் போராடினாரோ அந்த ஜெயலலிதாவை விட எடப்பாடி ஆட்சி சூப்பரா இருக்காம்.

அதாவது நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் வஞ்சிக்கப்பட்ட அவலம், மக்களின் தொடர் எதிர்ப்பு இருந்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசுடன் இணைந்து செயல்படுத்தும் எடப்பாடி அரசு தான் அருமையா செயல்படுதாம்.

மக்களே யோசிச்சுப் பார்க்கனும். இந்தப் பக்கம் நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன் எதிர்ப்புன்னு ஆவேசமா பேசுற சீமான் அந்தப்பக்கம், அந்த திட்டங்களை நிறைவேத்தும் எடப்பாடி பழனிச்சாமிக்கு சூப்பர் முதல்வர்ன்னு சான்றிதழ் தருகிறார்.

இவரை நம்பி தமிழகத்தை ஒருவேளை ஒப்படைத்து விட்டால்… எதற்கும் சீமானின் இந்த பல்டி பேச்சுகளை ஒரு தடவை கேட்டுப் பார்த்து முடிவு செய்யுங்கள் மக்களே..

– ’ரைட்’ பாண்டியன்

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!