See the pathetic state of 'Developed' Gujarat

பாருங்கப்பா வளர்ந்த குஜராத்தை… தண்ணிக்கும் கரண்டுக்கும் தவியா தவிக்குது!

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தைப் போல் இந்தியாவின் அனைத்து மாநிலத்தையும் மாற்றிக் காட்டுவோம்.’- இது சென்ற பாராளுமன்ற தேர்தலில் மோடியின் பிரச்சார சூளூரை.

அந்த பிரச்சாரத்தின் போது பேசப்பட்ட, கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை மோடி தலைமையிலான பாஜக அரசு.

இவர்கள் அளித்த வாக்குறுதிகளுக்கு நேர்மாறாக நிகழ்ந்து வருகிறது தற்போது உள்ள குஜராத்தின் நிலைமை.

ஆம்.. தண்ணீர் பஞ்சமும், மின்வெட்டு பிரச்சனையும் குஜராத் மாநிலத்தை பிடித்து ஆட்டுகிறது. தண்ணீருக்காக குஜராத் மக்கள் பல தூர கிலோமீட்டர் சென்று அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மழையும் கைவிட்டதால், நர்மதா நதியின் கடைசி சொட்டு நீரையும் உறிஞ்சுக் கொண்டிருக்கிறது குஜராத்.

மேலும், கடுமையான மின்வெட்டையும் எதிர்கொள்ளக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது அந்த மாநிலம்.

குஜராத்தில் 8,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட அனல் மற்றும் எரிவாயு மின் நிலையங்கள் மூடப்பட்டன.

கோடை காலங்களில் கைவசம் இருக்கும் சூரிய ஒளி மற்றும் காற்றலை மின் உற்பத்தியானது கைகொடுக்க துளியளவும் வாய்ப்பில்லை.

வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரத்தை பெற குஜராத் திட்டமிட்டுள்ளது.

குஜராத்துக்கு நேர்ந்ததுதான் ஒட்டுமொத்த தேசத்துக்கும் இந்த பாஜக ஆட்சியில் நேரப் போகிறதோ!

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!