பாஜக எனும் விஷம் தமிழ்நாட்டுக்குள் வரவே கூடாது! - VanakamIndia

பாஜக எனும் விஷம் தமிழ்நாட்டுக்குள் வரவே கூடாது!

தினகரன் கெட்டவரா.. சிறைக்குப் போகணுமா… சசிகலா ஒழியணுமா என்பதல்ல இப்போதைய கவலை. உலக மகா கிரிமினல் மூளை கட்சியான பாஜக, எவர் கழுத்தை அறுத்தாவது தமிழகத்தில் தங்கள் அரை டவுசர் அலங்கோலத்தை நிலை நிறுத்தப் பார்க்கிறதே… அதை எதிர்ப்பதுதான் முக்கியம். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதென்றால், அதற்கு சசிகலா அன்ட் கோ மட்டும் காரணமில்லை… இவர்களை விட 100 மடங்கு ஆபத்தான மோடி அன்ட் கோவும்தான்!

ஜெ மரணத்தில் மோடி அன்ட் கோவுக்குத் தெரியாத ரகசியம் ஏதுமில்லை. அந்த ரகசியத்தை வைத்து, திருட்டுத்தனமாக கடந்த 7 மாதங்களாக தமிழக மக்களை, தமிழக அரசியலை, தமிழகத்தின் வாழ்வாதாரத்தை மிரட்டிப் பணிய வைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறது பாஜக. இது ஊரறிந்த ரகசியம்.

துரதிருஷ்டவசமாக, இந்த பாஜக சனியனை வேரில் அமிலம் ஊற்றி அழிக்க வேண்டிய பொறுப்பில் உள்ள திமுக கண்டும் காணாமல் இருக்கிறது. மற்ற கட்சிகளோ ‘உன் பக்கம் வந்தால் என்ன தருவாய்?’ என்ற கேவல பேரத்திலேயே குறியாக உள்ளன.

‘பாஜக வந்தால்தான் என்ன’ என்று கள்ளத்தனமாக காதலிப்பவர்கள், ஏற்கெனவே பழமையில் மூழ்கித் திளைத்த உபி என்ற மாநிலம், ஒரே மாதத்துக்குள் கற்காலத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதை மறந்து விட வேண்டாம்.

அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பார்களாம்… அந்தப் பக்கம், அண்ணலின் அடிப்படை சித்தாந்தமான இட ஒதுக்கீட்டுக்கே உலை வைப்பார்களாம்…!

தமிழகத்தில் நடக்கும் பங்காளிச் சண்டையை, அடித்துப் பிடித்தாவது தமிழர்களே தீர்த்துக் கொள்வார்கள். ஆர்எஸ்எஸ் – பாஜக – மோடி அன்ட் கோவுக்கு மட்டும் யாரும் ஒரு நாளும் இடம் கொடுக்க வேண்டாம்.

-முதன்மை ஆசிரியர்

Author: admin
Tags

Similar posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!