மீண்டும் சிறைக்கு திரும்பினார் சசிகலா! - VanakamIndia

மீண்டும் சிறைக்கு திரும்பினார் சசிகலா!

சென்னை: 5 நாட்கள் பரோலில் சென்னை வந்த சசிகலா, இன்று மீண்டும் பெங்களூரு சிறைக்கு கிளம்பிச் சென்றார்.

சொத்து குவிப்பு வழக்கில், சிறை தண்டனை பெற்ற அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, கடந்த பிப்ரவரி மாதம், பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். சமீபத்தில், அவரது கணவர், நடராஜனுக்கு, உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சென்னை, பெரும்பாக்கத்தில் உள்ள, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, அவருக்கு உடல் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவரை பார்ப்பதற்காக, சசிகலா அக்டோபர் 6 ம் தேதி, ஐந்து நாட்கள், பரோலில் வந்தார்.

சென்னை, தி.நகரில் உள்ள, உறவினர் கிருஷ்ணப்பிரியா வீட்டில் தங்கினார். அங்கிருந்து, தினமும் மருத்துவமனை சென்று, கணவரைப் பார்த்து வந்தார். அரசியல் சந்திப்புகள் எதையும் அவர் நடத்தவில்லை.

அவரது பரோல் விடுமுறை, இன்று முடிவுற்றது. இன்று மாலை, 6:00 மணிக்குள் அவர், சிறைக்குள் செல்ல வேண்டும். இதனால் இன்று காலை 9 மணியளவில் தி.நகர் வீட்டில் இருந்து காரில் பெங்களூரு சிறைக்கு அவர் புறப்பட்டுச் சென்றார்.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!