Samsung Galaxy S9 is expected to be released on March 2

மார்ச் 2ம் தேதி வருகிறது சாம்சங் கேலக்ஸி எஸ்9… விலை கொஞ்சம் அதிகம் தான்!

சாம்சங் கேலக்ஸி மொபைல் போனின் புதிய மாடல் எஸ்9 , மார்ச் மாதம் 2ம் தேதி வெளிவரப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சாம்சங் நிறுவனம் அதே தேதியில் தா முன்பதிவும் தொடங்கும் என்று தெரிவித்து இருந்தது. ஐரோப்பியாவில் வெளிவரும் டச்சுப் பத்திரிக்கை டெக்டாஸ்டிக், புதிய மாடல் எஸ்9 விலை 100 யூரோ அதிகமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

உலகம் முழுவதும் இதே விலையேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. தற்போதைய எஸ்8 மாடல் ஐரோப்பாவில் 799 யூரோவிற்கு கிடைக்கிறது. புதிய எஸ்9 மாடல் 899 யூரோவிற்கு விற்கப்படும் என்று அந்தப் பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது. சாம்சங் நிறுவனம் அதிகாரப் பூர்வமாக விலை பற்றி எந்த தகவலும் சொல்லாத நிலையில் டெக்டாஸ்டிக் பத்திரிக்கை செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய மாடல் மார்ச் 2ம் தேதி எந்தெந்த நாடுகளில் கிடைக்கும் என்ற விவரம் குறிப்பிடப் படவில்லை.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!