டெல்லி : டெல்லி விஞ்ஞான் பவனில், ஆர்.எஸ்.எஸ். சார்பில், ‘பாரதத்தின் எதிர்காலம்: ஒரு ஆர்.எஸ்.எஸ். பார்வை’ என்ற தலைப்பில் அடுத்த மாதம் 17-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அதில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பங்கேற்று பேசுவதுடன், முக்கிய பிரமுகர்களுடன் உரையாடுகிறார். இந்நிகழ்ச்சிக்கு அழைக்கப்படுபவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அழைப்புவிடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் டெல்லியில் காங்கிரசில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுடனும், மூத்த நிர்வாகிகளுடனும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆலோசனை நடத்தினார்.
அதில் ஆர்.எஸ்.எஸ். ஒரு விஷம் போன்றது, அதன் அழைப்பை ஏற்று பங்கேற்க வேண்டாம் என அறிவுரை கூறியுள்ளதாக கூறப்படுகிறது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் நிர்வாகிகளும் ஆர்.எஸ்.எஸ். மாநாட்டில் பங்கேற்க கூடாது என கூறியுள்ளதாக தெரிகிறது.
– வணக்கம் இந்தியா