மீண்டும் 1000 ரூபாய்... புதிய வடிவில் விரைவில்! - மத்திய அரசு அறிவிப்பு - VanakamIndia

மீண்டும் 1000 ரூபாய்… புதிய வடிவில் விரைவில்! – மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: புதிய 1000 ரூபாய் நோட்டுகள் சில மாதங்களிலேயே புதிய வண்ணத்தில், கோணத்தில் வெளியிடப்படும் என நிதித்துறைச் செயலாளர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செவ்வாய்க்கிழமை (நவ.8) நள்ளிரவு முதல் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். மேலும் மாற்றம் காரணமாக நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு புதன்கிழமை (நவ.9) விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை இன்று வியாழக்கிழமை (நவ.10) முதல் மாற்றிக் கொள்ளும் ஏற்பாடுகளை தமிழகம் உள்பட நாடு முழுவதும் வங்கிகள் அனைத்தும் செய்து விநியோகம் செய்து வருகின்றன.

பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றிக் கொள்ள அனைத்து வங்கிக் கிளைகளிலும் சிறப்புக் கவுன்ட்டர் வசதி ஏற்பாடு செய்துள்ளன. இந்த சிறப்புக் கவுன்ட்டர் வரும் டிசம்பர் 30-ஆம் தேதிவரை செயல்படும்.

இந்நிலையில், வங்கிகளில் விநியோகம் செய்யப்படும் ரூபாய் நோட்டுகளில் ரூ.500 மற்றும் புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் மட்டும் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. புதிய 1000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு வரவில்லை என தகவல்கள் வெளியானது.

இதையடுத்து நிதித்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “புதிய வடிவிலான 1000 ரூபாய் நோட்டுகள் இன்னும் சில மாதங்களில் வெளியிடப்படும். அப்படி புழக்கத்திற்கு வரும் புதிய 1000 ரூபாய் நோட்டுகள் புதிய வண்ணத்தில், கோணத்தில் அனைத்து பாதுகாப்புகளும் நிறைந்த வடிவத்தில் சில மாதங்களிலேயே கிடைக்கும்,” என்றார்.

Author: admin
Tags

Similar posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!