ஃபெராரி, போர்ஷா கார்களுக்கு போட்டியாக வந்த டெஸ்லாவின் உலகின் அதிவேக ரோட்ஸ்டர்! - VanakamIndia

ஃபெராரி, போர்ஷா கார்களுக்கு போட்டியாக வந்த டெஸ்லாவின் உலகின் அதிவேக ரோட்ஸ்டர்!

லாஸ் ஏஞ்சல்ஸ்(யு.எஸ்) எலெக்ட்ரிக் கார்களின் நாயகன் எலன் மஸ்க், டெஸ்லாவின் புதிய ரோட்ஸ்டர் காரை அறிமுகப்படுத்தினார். இரண்டாவது ஜெனரேஷன் ரோட்ஸ்டர், ஃபெராரி, போர்ஷா கார்களுக்கு கடும் போட்டி கொடுக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அடிப்படை மாடல் ரோஸ்டர் 200 ஆயிரம் டாலருக்கும், ஸ்பெஷல் எடிஷனாக மிகக்குறைந்த அளவில் வர இருக்கும் ரோஸ்டர் 250 ஆயிரம் டாலருக்கும் விலை நிர்ணயிக்கப் பட்டுள்ளது. ஸ்பெஷல் எடிஷன் மாடலுக்கு முழுத் தொகையையும் முன் பணமாக செலுத்த வேண்டும். இந்த தொகை முதல் வரிசை கார்களான அஸ்டன் மார்ட்டின் மற்றும் பென்ட்லி கார்களின் விலை இருப்பதால் சற்று சலசலப்பும் ஏற்பட்டுள்ளது.

அஸ்டன் மார்ட்டின், பென்ட்லி கார்களின் வசதிக்கு ரோட்ஸ்டர் ஸ்பெஷல் எடிஷன் கார்கள் நிகராக இல்லை என்பதால், வரவேற்பு இருக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால், பெட்ரோல் எஞ்சின் கார்கள் வேண்டாம் என்று சுற்றுச்சூழலுக்கு ஆதரவு கொடுப்பவர்கள் ரோட்ஸ்டருக்கு மாறுவார்கள் என்று எலன் மஸ்க் நம்புகிறார்.

ரோட்ஸ்டர் கார் ஒரு தடவை பேட்டரி சார்ஜ் செய்தால் 620 மைல்கள் செல்லக்கூடியது. 0 விலிருந்து 100 மைல்கள் வேகத்தை 4.2 செகண்ட்களில் எட்டிவிடும். 250 மைல்கள் வேகத்தை விட அதிகமாகச் செல்லும். எவ்வளவு என்று துல்லியமாக இப்போது கூற மாட்டேன் என்று மஸ்க் கூறினார். தற்போது உலகின் அதிக வேகமான கார் ஸ்வீடன் நாட்டின் கெனிஸெக் ஆகும். அது 277.9 மைல்கள் வேகம் என்ற சாதனை படைத்துள்ளது. ரோட்ஸ்டர் அந்த சாதனையை முறியடித்து உலகின் வேகமான கார் என்று புதிய சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

புதிய ரோட்ஸ்டர் காருடன், டெஸ்லா செமி என்ற பெயரில் ஹெவி டூட்டி ட்ரக்க்கும் அறிமுகப்படுத்தப் பட்டது. டீஸல் ட்ரக்கை விட அனைத்து வகையிலும் சிறந்தது என்று மஸ்க் கூறினார்.80 ஆயிரம் டன் சரக்கு எடையுடன், 0விலிருந்து 60 மைல் வேகத்தை 20 செகண்ட்களில் எட்டி விடுமாம். ஒரு தடவை பேட்டரி சார்ஜ் செய்தால், 500 மைல்கள் வரை செல்லக்கூடியது.

அமெரிக்காவின் ஜீவ நாடி ஹெவி டுட்டி ட்ரக்குகள் தான். அது ஒரு மிகப்பெரியப் பணப்புழக்கம் உள்ள தொழிலாகும். டீஸல் ட்ரக்குகளுக்கு மாற்றாக ”டெஸ்லா செமி” பெரிய புரட்சியை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது

– வணக்கம் இந்தியா செய்திகள்

Roadster

​The quickest car in the world, with record-setting acceleration, range and performance.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!