RM Veerappan wishes Rajinikanth

ரஜினிகாந்துக்கு ஆர்எம் வீரப்பன் வாழ்த்து

தனிக்கட்சி தொடங்கி அரசியல் களம் காணும் ரஜினிகாந்த், இன்று முன்னாள் அமைச்சரும் எம்ஜிஆர் கழகத் தலைவருமான ஆர்எம் வீரப்பனை அவரது வீட்டில் சந்தித்தார்.

நேற்று திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்தார். இந்நிலையில் இன்று எம்ஜிஆர் கழகம் தலைவர் ஆர்எம் வீரப்பனை அவரது இல்லத்தில் சந்தித்தார். அவரிடம் தனது அரசியல்

பிரவேசம் குறித்துத் தெரிவித்தார். ரஜினிக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்த ஆர்எம் வீரப்பன், அவருடன் அரசியல் நிலைமை குறித்து சிறிது நேரம் ஆலோசனை செய்தார்.

1995லிருந்தே ரஜினியை அரசியலுக்கு அழைத்தவர் ஆர்எம் வீரப்பன். ஆர்எம் வீரப்பன் தயாரித்த பாட்ஷா பட வெள்ளி விழாவில் ரஜினிகாந்த் வெடிகுண்டு கலாச்சாரம் பற்றிப் பேச, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ஆர்எம் வீரப்பனை அடுத்த நாளே பதவி நீக்கம் செய்தார். அதைப் பற்றிக் கவலைப்படாத ஆர் எம் வீரப்பன் எம்ஜிஆர் கழகத்தைத் தொடங்கினார். அடுத்த தேர்தலில் அந்தக் கட்சிக்கு திமுக – தமாகா கூட்டணியில் இடம்பெற்றுத் தந்தார் ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது.

-வணக்கம்இந்தியா

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!