ரிலையன்ஸ் லைஃப் போன் வெடித்துச் சிதறியது... தப்பிய விஐபி குடும்பம்! - VanakamIndia

ரிலையன்ஸ் லைஃப் போன் வெடித்துச் சிதறியது… தப்பிய விஐபி குடும்பம்!

டெல்லி: ரிலையன்ஸ் ஜியோ வெளியிட்டுள்ள ‘லைஃ’ப்’ ஸ்மார்ட்போன் ஒன்றின் பேட்டரி வெடித்து சிதறிய சம்பவம் ஜியோ பயனாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் செயல் தலைவரான உமர் அப்துல்லாவின் அரசியல் செயலாளராக இருப்பவர் தன்வீர் சாதிக். இவர் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் வெடித்து சிதறிய நிலையில் உள்ள பேட்டரி ஒன்றின் படத்தை, ரிலையன்ஸ் லைஃ ப் வகை ஸ்மார்ட்போன் ஒன்றின் படத்துடன் இன்று வெளியிட்டிருந்தார்.

அத்துடன் ‘ரிலையன்ஸ் லைஃப் ஸ்மார்ட்போன் வெடித்து சிதறிய விபத்தில் என் குடும்பம் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தது’ என்று தெரிவித்திருந்தார்.

மேலும் இந்த தகவலை டிவிட்டரில் இயங்கும் ரிலையன்ஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் லைப் ஸ்மார்ட்ன்போன் நிறுவன டிவிட்டர் பக்கங்களுக்கும் தெரிவித்திருந்தார்.

சாதிக் அது என்ன மாடல் போன் என்பதையும், வெடித்து சிதறியதற்கான காரணத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால் உடனடியாக பதில் அளித்த ரிலையன்ஸ் நிறுவனம், ‘இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் விரைவில் சாதிக்கை தொடர்பு கொள்வதாகவும்’ தெரிவித்துள்ளது.

Author: admin
Tags

Similar posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!