கிறிஸ்துமஸ் அதிசயம்... சான் அண்டோனியோவில் பனி மழை! - VanakamIndia

கிறிஸ்துமஸ் அதிசயம்… சான் அண்டோனியோவில் பனி மழை!


சான் அண்டோனியோ: அமெரிக்காவின் தெற்கே மெக்சிகோவுக்கு அருகாமையில் இருக்கும் டெக்சாஸ் மாநிலத்தின் சான் அண்டோனியோ நகரில் அதியசமாக பனி மழை பொழிந்துள்ளது. அமெரிக்காவின் தெற்கு பகுதியில் பனி மழை மிகவும் அரிதான ஒன்றாகும். சான் அண்டோனியோவைப் பொறுத்த வரை, கடைசியாக 2011ம் ஆண்டு தான் பனி மழை பொழிந்தது. அதுவும் 0.4 இன்ச் என்றளவில் மிகக் குறைவாகத் தான் இருந்தது.

வியாழக்கிழமை மாலை 6:30 மணி முதல் பனி மழை தொடங்கி விட்டது. அலுவலகம் நேரம் முடிந்த பிறகு என்பதால், சாலையில் சீக்கிரமாகவே போக்குவரத்து குறைந்து விட்டது. வீட்டுக்கு வந்தவர்கள் குடும்பத்தோடு பனி மழையை ரசிக்கத் தொடங்கி விட்டனர்.

கடந்த மூன்று நாட்களாக மழையால் சுருண்டு போயிருந்த மக்கள், சாயங்காலம் மெல்ல பூப்போல பனி விழ ஆரம்பித்ததும், எல்லார் வாட்ஸ் ஆப்பும் படபடக்க ஆரம்பித்தது!! ஏதோ ஓர் அதிசயம் நிகழ்ந்தது போல் நண்பர்கள்,குழந்தைகள் என ஒரே ஆரவாரம், உற்சாகம்!! நேரம் ஆக ஆக நிறைய பொழிய தொடங்கியது!!

வானிலை செய்தியில் ஒரு இன்ச் அளவு என்றார்கள்.நச நச மழைக்கு எரிச்சல் பட்டவர்கள், கொட்டும் பனியில் துள்ளிக் குதிக்க ஆரம்பித்தனர். இது ஒருபுறமிருக்க,காரில் பயணம் செய்வது, ரிஸ்காகத் தான் இருந்தது. நாளை எப்படி இருக்கப் போகிறதோ தெரியாது.எது எப்படியோ, இரவு உணவு மறந்தே போனோம்!!! சான் அண்டோனியோ மக்கள் இன்று என்ன தவம் செய்தனரோ!!

பனியே,பனியே… அடிக்கடி சான் அண்டோனியோவுக்கும் வா!

– ஷீலா ரமணன்

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!