#Rajinikanthenterspolitics becomes viral globally

உலக அளவில் ட்ரெண்டிங்கில் ‘அரசியல் தலைவர்’ ரஜினி!



சென்னை:
தனிக்கட்சி தொடங்கி அரசியலுக்கு வருவதாக ரஜினி அறிவித்ததும் சிலர் குய்யோ முறையோ என கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தாலும், அவரது அறிவிப்புக்கு சர்வதேச அளவில் வரவேற்பும் வாழ்த்துகளும் கிடைத்துள்ளன.

உலகளாவிய ஊடகங்களில் ரஜினியின் அரசியல் அறிவிப்பு பிரதான இடம் பிடித்துள்ளது. இன்று காலையிலிருந்தே ட்விட்டரில் உலகளவிலும், இந்திய அளவிலும் முதலிடம் பிடித்துவிட்டது #RajinikanthEntersPolitics.

தனிக்கட்சி தொடங்கி வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என அவர் தெரிவித்துள்ள நிலையில், முதல் நபராக ரஜினியின் நண்பர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்தி வரவேற்றார். அவரை தொடர்ந்து நடிகை குஷ்பூ, கஸ்தூரி, நடிகர் விவேக், ராகவா லாரன்ஸ் உள்ளிடோர் வரிசையாக தங்களது டுவிட்டர் பக்கங்களில் மூலம் ரஜினியை வாழ்த்தி வருகின்றனர்.

ரஜினியின் அரசியல் வருகை எப்படி இருக்கும்? என்று உள்ளூர் ஊடகங்கள் மட்டுமல்லாது தேசிய ஊடகங்களும் விவாதித்து வருகின்றன.

இந்நிலையில், ஜப்பான் மற்றும் சீனாவின் முக்கிய ஊடகங்களான ஜப்பான் டைம்ஸ், ஜின்ஹுவா ஆகியவை ரஜினி தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளன. பிபிசி, சிஎன்என் போன்ற தொலைக்காட்சிகளும் ரஜினியின் அரசியல் வருகை செய்திக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து செய்தி வெளியிட்டு வருகின்றன.

ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்காவில் ரஜினிகாந்துக்கு என தனி ரசிகர் வட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!