தமிழக மக்களுக்கு ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து! - VanakamIndia

தமிழக மக்களுக்கு ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து!


சென்னை: தமிழர் திருநாளான பொங்கலையொட்டி அனைவருக்கும் தனது பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

தனது போயஸ் தோட்ட இல்லத்தில் தன்னைப் பார்க்க வந்த ரசிகர்களுக்கு வாழ்த்துச் சொன்னார் ரஜினிகாந்த். வேட்டி சட்டையில் வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “இந்த பொங்கல் நாளில் அனைவரும் செழிப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வாழ்த்துகள்,” என்றார்.

அரசியல் பிரவேசம் செய்துள்ள தங்களுக்கு இந்த பொங்கல் விசேஷமானதா? என்று கேட்டபோது, “இந்த பொங்கல் என்றல்ல.. எல்லா பொங்கலுமே விசேஷமானதுதான்… பார்க்கலாம்,” என்றார்.

முன்னதாக தமிழக மக்கள் அனைவருக்கும் அவர் ட்விட்டரிலும் பொங்கல் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!